தேர்தல் நியாயமாக நடந்து.. அது தோல்வியடைந்தால் ஒப்புக்கொள்வேன்.. டிரம்ப் தடாலடி பேச்சு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புளோரிடாவில் தனது வாக்கை பதிவு செய்த டிரம்ப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது நியாயமான முறையில் தேர்தல் நடந்து அதில் தான் தோல்வி அடைந்தால் நிச்சயம் தோல்வியை ஒப்புக்கொள்வேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள்.

வாக்களித்தார் டிரம்ப்: இந்த முறை போட்டி மிகக் கடுமையாக இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பும் கடைசி நொடி வரை மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் புளோரிடாவில் வாக்களித்தார். மனைவி மெலனியா உடன் பாம் பீச்சில் உள்ள வாக்குச் சாவடியில் டிரம்ப் தனது வாக்கைப் பதிவு செய்தார்
வாக்களித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். தேர்தல் நியாயமான முறையில் நடந்து அதில் தான் தோற்றால் தோல்வியை ஒப்புக்கொள்வேன் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். மேலும், தனக்கு மக்களிடையே ஆதரவு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது அமெரிக்க வரலாற்றின் மிகப் பெரிய அரசியல் இயக்கமாக நினைவு கூரப்படும் என்றார்.
தோல்வியை ஏற்பேன்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் அதிபர் தேர்தலில் தோற்றால், அது நியாயமான முறையில் நடந்த தேர்தலாக இருந்தால், எனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் முதல் நபராக நான் இருப்பேன். இதுவரை பார்க்கும் போது இது நியாயமான முறையில் நடக்கும் தேர்தலாகவே தெரிகிறது.
குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகப் பெரியளவில் திரண்டு வாக்களித்து வருகிறார்கள். இது நம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக இருக்கும் ... நாங்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றப் போகிறோம்" என்று தெரிவித்தார்.
2020 அதிபர் தேர்தல்: அமெரிக்காவில் கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் டிரம்ப் தோல்வி அடைந்தார். இருப்பினும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தலில் மிகப் பெரியளவில் முறைகேடு நடந்ததாகக் குற்றஞ்சாட்டினார். எந்தவொரு ஆதாரத்தையும் பகிராமல் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடர்ந்து சாடி வந்த நிலையில், அமெரிக்காவில் பல இடங்களில் வன்முறையும் வெடித்தது.
இந்த முறையும் ஒரு வேலை அதிபர் தேர்தலில் டிரம்ப் வெல்லவில்லை என்றால் அதேபோல நடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் டிரம்ப் அதை ஏற்காமல் பிரச்சினை செய்ய வாய்ப்பு இருப்பதாகவே அந்நாட்டின் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சூழலில் டிரம்ப் இதுபோல கருத்து கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications