முதல் நாளே வெடியை வீசிய அதிபர் டிரம்ப்! மேடையிலேயே ஸ்டன் ஆன எலான் மஸ்க்.. இது செம ட்விஸ்ட்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப் நேற்று பல மேஜர் அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக அவர் மின்சார வாகனங்கள் தொடர்பாக கூறிய சில கருத்துகள் அவரை ஆதரித்த எலான் மஸ்கிற்கு தலைவலியை கொடுப்பதாகவே இருந்துள்ளது. டிரம்ப் அப்படி என்ன பேசினார்.. எலான் மஸ்க் ஸ்டன் ஆக என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் நேற்று பதவியேற்றார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சில முக்கிய கருத்துளை தெரிவித்தார்.

முதல் நாளே தனது ஸ்டைலில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட டிரம்ப், தெற்கு எல்லையில் தேசிய எமர்ஜென்சியை பயன்படுத்த உள்ளதாகவும் சட்டவிரோத குடியோற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க போவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
டிரில்லிங் ஆதரவு:
அதன் பிறகு அவர் சொன்ன கருத்து தான் டிரம்பிற்கு ஆதரவாக ஊர் ஊராக பிரச்சாரம் செய்த எலான் மஸ்கிற்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதாவது டிரம்ப் கூறுகையில், "அரசு தேவையற்ற செலவுகளை செய்தது, உயரும் எனர்ஜி விலை ஆகியவை காரணமாக விலைவாசி உச்சத்திற்கு போய்விட்டது. இதனால் எரிபொருள் விலகளை கட்டுக்குள் கொண்டு வர நேஷ்னல் எமர்ஜென்சியை அறிவிக்க உள்ளேன். டிரில்லிங் செய்ய ஊக்குவிக்கப்படும்.
மின்சார வாகனங்கள்:
நாம் மீண்டும் பணக்கார நாடாக மாற போகிறோம். நமது நிலத்திற்கு அடியில் இருக்கும் திரவ தங்கம் (கச்சா எண்ணெய்யை குறிப்பிடுகிறார்) வைத்தே நாம் மீண்டும் பணக்கார நாடாக மாற போகிறேன்" என்றார். இதுவரை எதுவும் பிரச்சினை இல்லை. ஆனால், அதன் பிறகு டிரம்ப் சொன்னது தான் எலான் மஸ்கிற்கு தலைவலியை கொடுப்பதாக இருக்கிறது. அதாவது பைடன் அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்து இருந்தார். அந்த நிர்வாக உத்தரவை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்ததே இதற்கு காரணமாகும்.
அதாவது முந்தைய பைடன் அரசு வரும் 2030ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் விற்பனையாகும் 50% புதிய கார்களை மின்சார கார்களாக மாற்றும் வகையில் நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இதற்காக மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சில பல வரி சலுகைகளையும் பைடன் நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த முடிவை ரத்து செய்த டிரம்ப், மீண்டும் பெட்ரோல் வாகனங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். இது அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
எவான் மஸ்கிற்கு தலைவலி:
இதுவே எலான் மஸ்க்கிற்கு தலைவலியை கொடுப்பதாக இருக்கிறது. ஏனென்றால் அமெரிக்காவின் மிக பெரிய மின்சார கார் நிறுவனமான இப்போது எலான் மஸ்கின் டெஸ்லா தான் இருக்கிறது. பைடன் அரசு கொண்டு வந்த வரி விலக்கு சலுகைகளால் டெஸ்லா பெரியளவில் பலனும் பெற்றது. குறுகிய காலத்தில் டெஸ்லா அமெரிக்காவின் மிக பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றாக வளரவும் இந்த வரி சலுகைகள் முக்கிய காரணமாக இருந்தது. அப்படி இருக்கும் போது திடீரென டிரம்ப் தடாலடியாக அதை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
என்ன காரணம்:
அதிலும் கூட முதலில் பிரச்சாரத்தின் போது எலான் மஸ்க் முதலில் டிரம்பை ஆதரிப்பதாக அறிவித்த போது, மின்சார வாகனங்களை ஆதரிக்க போவதாகவே டிரம்பம் கடந்த ஆக்ஸட் மாதம் கூறியிருந்தார். ஆனால், இப்போது அதிபராக பதவியேற்ற முதல் நாளே அதற்கு நேர்மாறான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இது டெஸ்டா நிறுவனத்திற்கும் எலான் மஸ்கிற்கும் பெரிய தலைவலியே தரும்.












Click it and Unblock the Notifications