அடாவடி டிரம்ப்.. கனடாவுக்கு கூடுதலாக 10% வரி! காரணத்தை கேட்டா நீங்களே சிரிப்பீங்க!
வாஷிங்டன்: இந்தியாவும், பிரேசிலுக்கும்தான் வரி போடுகிறார் என்றால், நட்பு நாடான கனடாவுக்கு கூட வரி போட்டு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார் டிரம்ப். ஏற்கனவே கனடாவுக்கு 35% அளவுக்கு வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் கூடுதலாக 10% வரி போடப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் நகைப்புக்குரியதாய் இருக்கிறது.
கனடா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. ராணுவத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி.. கனடா இல்லாமல் அமெரிக்காவால் தனித்து இயங்க முடியாது. ஏனெனில் கனடா G7, NATO, G20 போன்ற முக்கிய அமைப்புகளில் பிரதான நாடாக இருக்கிறது. மறுபுறம், பொருளாதார ரீதியில் கனடாவின் தேவை அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது.

அமெரிக்காவுக்கு கனடா முக்கியம்
எந்த அளவுக்கு முக்கியம் எனில், கனடாவிலிருந்து ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் அமெரிக்காவுக்கு வர 'ஜஸ்ட்-இன்-டைம்' வர்த்தக முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் சிறிய சிக்கல் ஏற்பட்டால் கூட அமெரிக்காவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சில மணி நேரங்களிலேயே முடங்கிவிடும். அந்த அளவுக்கு முக்கிய சப்ளையராக கனடா இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கார் தொழிற்சாலைகள் வெறும் அசெம்பிள் வேலையை மட்டும்தான் செய்யும்.
கனடாவுக்கு வரி
கார்களுக்கு தேவையான என்ஜின் தொடங்கி அனைத்து உதிரி பாகங்களும் கனடாவிலிருந்துதான் வருகின்றன. அதேபோல சில தொழிற்சாலைகள் அமெரிக்காவில் உதிரி பாகங்களை செய்து கனடாவுக்கு அனுப்பி அங்கு அசெம்பிள் செய்கின்றன. இப்படியாக இருநாடுகளுக்கும் இடையேயான உறவு பலமாக இருக்கிறது. இப்படியாப்பட்ட நாட்டின் மீது கூட டிரம்ப் வரி போட்டிருக்கிறார். டிரம்ப் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்பதை கணிக்க முடியாதவராக இருக்கிறார். இது உலகம் அறிந்த விஷயம்தான். ஆனால், தற்போது கனடாவுக்கான வரியை 10% அதிகரித்திருக்கிறார் என்பதுதான் முக்கியமான சமாச்சாரம்.
வரி உயர்வுக்கு காரணம்
ஏன் இந்த வரி அதிகரிப்பு என்று, காரணத்தை கேட்டால் நீங்களே குபீர் என சிரிப்பீர்கள். அதாவது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. வரிக்கு எதிராக இந்த விளம்பரம் இருந்தது. விளம்பரத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் பேச்சிலிருந்து சில வார்த்தைகள் மேற்கோள்களாக பயன்படுத்தப்பட்டிருந்தன. "அதிக வரிகள் தவிர்க்க முடியாமல் பதிலடிக்கு வழிவகுக்கும், மேலும் கடுமையான வர்த்தகப் போர்களைத் தூண்டும்" என்று ரீகன் பேசியிருந்தது விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
டிரம்ப் அதிருப்தி
நானே உலகம் முழுவதும் வரி போட்டு, அமெரிக்காவின் அதிகாரத்தை மீண்டும் பழையபடி கையில் எடுக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தால், பக்கத்துல இருந்துகிட்டே பல்ல புடிச்சி பாக்குறீயா கனடா? என்று கண் சிவந்த டிரம்ப், விளம்பரத்தை நீக்க உத்தரவிட்டார். "உண்மைகளை தவறாக பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், விரோத செயலாகவும் இந்த விளம்பரம் இருக்கிறது" என்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் டிரம்ப்பின் பேச்சை யாருமே கண்டுக்கவில்லை. விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பானது.
இதனால் கடுப்பான டிரம்ப், இந்த புடிச்சுக்கோ என்று கூடுதலாக 10% வரி போட்டிருக்கிறார். இது குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கும் கனடா பிரதமர் மார்க் கர்னி, "2008ல் ஏற்பட்ட மந்த நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்" என்று டிரம்ப்பை விமர்சித்திருக்கிறார். இந்த வரியும், அதற்கான காரணமும் நகைப்புக்குரியதாக இருந்தாலும், கனடா வரியாக கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications