வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதீத ஆர்வத்துடன் இருந்தால் இப்படித்தான்.. டிரம்பால் வேலையிழந்த இளைஞர்.. காட்டி கொடுத்த ஐடி கார்டு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அதீத ஆர்வத்துடன் ஐடி கார்டு அணிந்தபடி டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டவரை பணியிலிருந்து நீக்கியது ஒரு நிறுவனம்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையிலும் அதை ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் டிரம்ப். கடந்த புதன்கிழமை அதிபர் தேர்தலில் ஜோ பிடனின் வெற்றியை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின.

அப்போது நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் அங்கு கலவரத்தை உண்டாக்கினர். இதில் 4 பேர் பலியாகிவிட்டனர்.

கண்ணீர் புகை

கண்ணீர் புகை

பின்னர் போலீஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி அப்புறப்படுத்தினர். டிரம்பின் இந்த செயலால் உலக நாடுகள் கை கொட்டி சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டிரம்பால் உயிரிழந்தவர்கள் வரிசையில் ஒருவர் வேலையை இழந்துள்ளார்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

வன்முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரு இளைஞர் கழுத்தில் ஒரு நிறுவனத்தின் ஐடி கார்டை அணிந்திருந்தார். அந்த அடையாளத்தை கண்டுபிடித்த நிறுவனம் அவரை வேலையைவிட்டு அனுப்பிவிட்டது. இத்தனை பேர் கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த இளைஞர் மட்டும் எப்படி பிடிப்பட்டார் என்று யோசிக்கிறீர்களா?

கலவரம் நடந்த இடம்

கலவரம் நடந்த இடம்

கலவரம் நடைபெற்ற இடத்திலிருந்து விதவிதமான புகைப்படங்கள் வெளியாகின. அதில் ஒருவர் கையில் கொடியுடன் டிரம்ப் பெயரிட்ட தொப்பியை அணிந்திருந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த அடையாள அட்டையில் என்டிஎம் என்ற எழுத்துகள் தெளிவாக தெரிந்தது. இதனால் அவர் அந்த நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டார்.

எளிதாக நீக்கப்பட்டுவிட்டது

எளிதாக நீக்கப்பட்டுவிட்டது

அந்த நிறுவனத்தின் பெயர் Navistar Direct Marketing என்பதை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அந்த நிறுவனம் அந்த நபரை ஏன் பணியிலிருந்து நீக்கியது என்பதற்கான காரணத்தையும் சொல்லியுள்ளது. ஒருவரின் தவறான செயல் மற்றவர்களை பாதிக்கக் கூடாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Trump supporter sacked after he was involving in US Capitol riots wearing his official badge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X