கமலாவிற்கு கல்தா.. பென்சில்வேனியாவில் வென்றதால் டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராவது உறுதி
வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக பென்சில்வேனியா இருந்தது.இங்கு மொத்தம் 19 எலக்ட்ரோல் வாக்குகள் உள்ள நிலையில் இங்கு டிரம்ப் வென்றதால் அவர் அதிபராவது உறுதியாகி உள்ளது. கமலா கிட்டத்தட்ட தோற்பது உறுதியாகவிட்டது. பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் 50.9% வாக்குகள் பெற்று 19 வாக்குகளையும் வென்றார். அதேநேரம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் 48.1% வாக்குகளுடன் தோல்வி அடைந்தார்.
அமெரிக்க அதிபர் யார் என்பதை 50 மாகாணங்களில் உள்ள மொத்தம் 16 கோடியே 50 பேர் தீர்மானிக்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல் நேற்று நடந்தது. அதாவது இந்திய நேரப்படி நேற்று இரவு தொடங்கி, இன்று அதிகாலை வரை நடந்தது. இதில் அதிபர் வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் களம் இறங்கினார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கினார். இதேபோல் வேறு சில கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடந்துள்ளது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மாகாணத்தில் 10 வாக்குகள், 20 வாக்குகள், அதிகபட்சம் 50 வாக்குகள் வரை இருக்கும். இதை மாகாணத்திற்குள் தனித்தனியாக கட்சிகள் கைப்பற்ற முடியாது.
மொத்தமாக அதிகமாக வாக்குகள் பெறுவோருக்கே, அங்குள்ள 10 வாக்குகளும் கிடைக்கும். அந்த வகையில் தான் தேர்தல் முடிவுகள் உள்ளன. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டிரம்ப் தான் முன்னிலை வகித்து வந்தார். ப்ளோரிடா, டெக்சாஸ், நார்த் கரோலினா, ஓகியோ, இண்டியானா, வடக்கு கரோலினா, மிசோரி உள்பட 24 மாகாணங்களில் உள்ள 230 இடங்களில் வென்று டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார்.
இதேபோல் கலிபோர்னியா, நியூயார்க், மாசாசெட், வாஷிங்டன், மேரிலேண்ட், ஒரேகான், கோலர்டா உள்பட 15 மாகாணங்களில் வென்று கமலா ஹாரிஷ் 214 இடங்களில் வெற்றியுடன் முன்னிலை வகித்து வந்தார். இவருக்கும் வெறும் 20 வாக்குகள் தான் வித்தியாசம் இருந்து இதனிடையே பாட்டில் நெக் என்று கூறப்படும் மிக முக்கியமான மாகாணமான பென்சில்வேனியாவில் டிரம்ப் ஒருவேளை வெற்றி பெற்றால், டிரம்ப் அதிபராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 3,389,782 ( 50.9%) வாக்குகளுடன் வெற்றி பெற்றார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3,200,858 ( 48.1%) வாக்குகளுடன் தோல்வியை தழுவினார் . அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் பென்சில்வேனியா மிக முக்கியமான மாநிலம் அகும்,. ஏனெனில் இங்கு 2020 ஆம் ஆண்டில், டிரம்ப் 2,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்தார், ஆனால் இறுதி எண்ணிக்கையில் அதிபர் ஜோ பைடனிடம் தோற்றார். இங்கு டிரம்ப் தோற்றது டிரம்பின் தோல்விக்கு காரணமாக இருந்தது.ஆனால் இந்த முறை இங்கு வென்ற டிரம்ப அமெரிக்க அதிபர் நான் தான் என்று 78 வயதில் உறுதி செய்துள்ளார். தற்போதைய நிலையில் டொனால்டு டிரம்ப் 267 இடங்களிலும், கமலா ஹாரிஷ் 214 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார்கள். வெற்றியின் விளிம்பில் உள்ள டிரம்ப் அதிபராவது உறுதியாகி உள்ளது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications