சிறார்களுக்கு பாலின மாற்று சிகிச்சைகளுக்கு தடை.. டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தங்கள் பாலின அடையாளத்தில் குழப்பம் மற்றும் மன அழுத்தம் இருக்கும் குழந்தைகள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். ஆனால், இதை ஜெண்டர் அஃபிர்மிங் கேர் போன்ற பாலின சிகிச்சை தடுக்கின்றன. இப்படி இருக்கையில், அமெரிக்காவில் இனி சிறார்களுக்கு பாலின மாற்று சிகிச்சைகளே இருக்கக்கூடாது என்று டிரம்ப் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மனநலன்: தங்களின் பாலின அடையாளத்தில் குழப்பம் அல்லது மன அழுத்தம் கொண்ட குழந்தைகளுக்கு முறையான சிகிச்சைகள் கிடைக்காவிட்டால், அவர்கள் கடுமையான மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் மற்றும் சுய பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்.

Trump Targets Transgender Care

உயிர்காக்கும் சிகிச்சை: முறையான 'ஜெண்டர் அஃபிர்மிங் கேர்' அத்தகைய குழந்தைகளின் தற்கொலை விகிதத்தை 73% வரை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தனிமனித உரிமை: ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பெற்றோர் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையுடன் தங்களுக்குத் தேவையான மருத்துவத்தைப் பெற உரிமை உண்டு. இதில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், டிரம்ப் இதற்கு எதிராக பேசியிருக்கிறார். ஹார்மோன் ஊசிகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் குழந்தைகளின் உடலில் நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தும். பிற்காலத்தில் அவர்கள் மனம் மாறினால், பழைய நிலைக்குத் திரும்புவது கடினம் அல்லது சாத்தியமற்றது என்பது டிரம்ப் ஆதரவாளர்களின் வாதம்.

இத்தகைய சிகிச்சைகள் எலும்பு அடர்த்தி குறைவு, மலட்டுத்தன்மை மற்றும் பாலியல் உணர்வுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். குழந்தைகள் இதுபோன்ற பெரிய மருத்துவ முடிவுகளை எடுக்கும் அளவிற்கு மனமுதிர்ச்சி பெற்றவர்கள் அல்ல. 18 வயது வரை அவர்களை இத்தகைய ஆபத்தான பரிசோதனைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களின் வாதம்.

இப்படி இருக்கையில், குழந்தைகளுக்குத் திருநங்கை அறுவை சிகிச்சைகள் அல்லது மாற்றங்கள் செய்யப்படக் கூடாது என்று டிரம்ப் வாதிடுகிறார். இதற்கான சட்டத்தை விரைவில் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+