Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வரிகள் விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்தார். இதற்கிடையே மீண்டும் காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்யும்போது அதிகபட்சம் 100% வரை வரி விதிக்கக்கூடிய ஒரு நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அதிக மருந்துகள் அனுப்பப்படும் சூழலில், டிரம்பின் இந்த உத்தரவு கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்தாண்டு திடீரென உலக நாடுகள் மீது வரிகளை விதித்தது அனைவருக்கும் தெரியும். இந்தியா, கனடா என எந்தவொரு நட்பு நாடுகளையும் விடாமல் அனைத்து நாடுகள் மீதும் டிரம்ப் வரிகளை அறிவித்து இருந்தார். இது அமெரிக்கா உடனான உலக நாடுகளின் உறவுகளை மிகக் கடுமையாகப் பாதித்தது. நடுவில் சில காலம் வரி விஷயத்தில் அமைதியாக இருந்த டிரம்ப், இப்போது மீண்டும் அதைக் கையில் எடுத்துள்ளார்.

Trump tariff on medicines US Unveils 100 Tariff to Push Pharma Deals Will India affected by this

100% வரி

அதாவது காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்யும்போது அதிகபட்சம் 100% வரை வரி விதிக்கக்கூடிய ஒரு நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதிபர் டிரம்ப் இரு கண்டிஷன்களை போடுகிறார். அதை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 100% வரை வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் எப்போதும் காப்புரிமை பெற்ற மருந்துகள் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்படும். அதைக் குறைக்க வேண்டும்.. "அதிக சலுகை பெறும் நாடு" (most favoured nation) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விலையைக் குறைக்க வேண்டும். அடுத்து அமெரிக்காவிலேயே மருந்துகளை உற்பத்தி செய்யத் தேவையான ஆலையை உருவாக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்தால் மட்டுமே வரி விலக்கு வழங்கப்படும்.

டிரம்ப்

விலையில் சமரசம் செய்யாமல் அமெரிக்காவில் உற்பத்தி மையங்களை மட்டும் உருவாக்கும் நிறுவனங்களுக்கு 20% வரி விதிக்கப்படும். 4 ஆண்டுகளில் ரேட் குறித்த டீல் போடவில்லை என்றால் வரிகள் 100% ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்களின் இறக்குமதியால் தேசியப் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்த வரிகள் அவசியமானவை என இந்த உத்தரவில் கையெழுத்திடும் போது டிரம்ப் குறிப்பிட்டார்.

அதேநேரம் டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாலேயே வரிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடாது. இந்த 100% வரிகள் முழுமையாக அமலுக்கு வருவதற்கு முன்பு டிரம்ப் அரசுடன் பேசி டீலை போட மருந்து நிறுவனங்களுக்கு போதிய டைம் தரப்பட்டுள்ளது. பெரிய மருந்து நிறுவனங்களுக்கு 120 நாட்களும், மற்ற நிறுவனங்களுக்கு 180 நாட்களும் இதற்காக வழங்கப்படும் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். ஏற்கனவே சுமார் 17 மருந்து நிறுவனங்கள் இது தொடர்பாக டிரம்ப் அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறதாம். அதில் 13 நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

எதிர்ப்பு

ஆனால், டிரம்பின் இந்த நடவடிக்கைக்குப் பரவலாக எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க மருந்து நிறுவனங்களின் வர்த்தகக் குழுவான PhRMA-வின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீபன் கூறுகையில், "அதிநவீன மருந்துகளின் மீதான வரிகள் செலவுகளை அதிகரிக்கும். மேலும், அமெரிக்காவில் பல பில்லியன் டாலர் முதலீடுகளை இது ஆபத்தில் தள்ளும். ஏற்கனவே மருத்துவத் துறையில் அமெரிக்காவில் போதியளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் மருந்துகளும் கூட அமெரிக்க நட்பு நாடுகளிலிருந்து வருகின்றன" என்றார்.

இந்தியா

டிரம்பின் இந்த உத்தரவால் இந்திய நிறுவனங்களும் கூட பாதிக்கப்படலாம்.. இருப்பினும், தற்போதைக்கு அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகப்படியான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் கூட அவை பெரும்பாலும் ஜெனரிக் மருந்துகள் தான். டிரம்ப் இப்போது வரி விதித்துள்ளது பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு மட்டுமே என்பதால் இந்தியாவுக்குப் பெரிய பாதிப்புகள் இருக்காது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+