உக்ரைன் போர் நிற்க வேண்டுமா? நேட்டோ நாடுகள் இதை செய்யனுமாம்! டிரம்ப் போட்ட புது உத்தரவு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நேட்டோ நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது 50-100% வரி விதிக்கப்போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

டிரம்ப் தனது "ட்ரூத் சோஷியல்" மீடியாவில், நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியளிப்பதாக பதிவிட்டுள்ளார். நேட்டோ அமைப்பைப் பார்த்து, "இப்படி செய்வதன் மூலம் ரஷ்யாவுடனான உங்கள் பேச்சுவார்த்தையின் வலிமை பலவீனமடைகிறது. போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100% குறைவாகவே உள்ளது" என்று விமர்சித்திருக்கிறார்.

Trump tariff China

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், இதர எரிபொருட்களை வாங்கும் நாடுகளில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. நேட்டோ உறுப்பு நாடான துருக்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா என நேட்டோ கூட்டமைப்பின் 32 உறுப்பு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

டிரம்பின் மிரட்டல் ஏன்?

சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் நேட்டோ கூட்டாளியான போலந்தின் வான்வெளியில் நுழைந்ததை அடுத்து, இந்த எச்சரிக்கை வந்துள்ளது. போலந்து அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தியது. இருப்பினும் நேட்டோ நாடுகளில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த சூழலில்தான் ரஷ்ய எண்ணெய்க்கு நேட்டோ நாடுகள் தடை விதிக்க வேண்டும் என்றும் சீனா மீது வரி விதிக்க வேண்டும் எனவும் இப்படி செய்வதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர பெரிதும் உதவ முடியும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் டிரம்ப் கூறுகையில், "சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உறவு வலுவானதாக இருக்கிறது. ஆனால் நான் போடும் வரி அந்த உறவை உடைக்கும். இந்த போருக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோரே காரணம் . இது டிரம்ப்பின் போர் அல்ல. நான் அதிபராக இருந்திருந்தால் அது ஒருபோதும் தொடங்கியிருக்காது. இது பைடன் மற்றும் ஜெலென்ஸ்கியின் போர். இருப்பினும் நேட்டோ நான் சொல்வதை கேட்க வேண்டும்.

போர் விரைவில் முடிவுக்கு வரும், மேலும் அனைத்து உயிர்களும் காப்பாற்றப்படும்! இல்லையென்றால், நீங்கள் என் நேரத்தையும், அமெரிக்காவின் நேரம், சக்தி மற்றும் பணத்தையும் வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம்" என கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+