பைடன் பக்கம் கட்சி தாவும் எலான் மஸ்க்? கண் சிவந்த டிரம்ப்.. வார்னிங் பயங்கரமா இருக்கே!
வாஷிங்டன்: அமெரிக்காவின் 'பிக் பிரதர்ஸ்' டிரம்ப்-எலான் மஸ்க் இடையேயான பஞ்சாயத்து தற்போது சூடுபிடித்திருக்கிறது. போகிற போக்கை பார்த்தால், டிரம்புக்கு கம்பி நீட்டிவிட்டு, பைடன் கட்சியில் மஸ்க் ஐக்கியமாகிவிடுவார் போல தெரிகிறது. அப்படியான நிலைப்பாட்டுக்கு மஸ்க் போனால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
'பெரிய, அழகான மசோதா' என்று ஒன்றை டிரம்ப் கொண்டு வந்திருக்கிறார். பல ஓட்டை உடைச்சல்களுடன், வழக்கம் போல சாமானிய மக்களை இன்னும் கசக்கி பிழியவே இந்த மசோதா கொண்டுவந்திருப்பதாக எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவெனில், எலான் மஸ்க்கும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். காரணம் இது வரிச்சலுகையை கொடுப்பதாகவும, எனவே மோசமான மசோதா என்றும் விமர்சித்திருந்தார்.

அவ்வளவுதான் இருவருக்கும் முட்டிக்கொண்டது. என்னதான் தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு, மஸ்க் உதவி செய்திருந்தாலும், கொஞ்சமும் அதைப்பற்றி நினைத்து பார்க்காமல் இஷ்டத்திற்கும் மஸ்கை வறுத்தெடுத்தார் டிரம்ப். தற்போது இந்த மோதல்கள் புதிய உச்சத்திற்கு சென்றிருக்கிறது. அதாவது அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்குவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று டிவிட்டரில் மஸ்க் கேள்வி எழுப்ப, 80% பேர், ஆமாம் புதுசா கட்சி வேணும் என்று பதில் சொல்லியிருந்தார்கள்.
எனவே 'தி அமெரிக்கன் பார்டி' எனும் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார். இதற்கு முன்னர் வரை, தனிப்பட்ட மோதல்களாக இருந்த இந்த சண்டை, இதனையடுத்து அரசியல் சலசலப்பாக வெடித்தது. மறுபுறம் டிரம்பை பலர் உசுப்பிவிட தொடங்கினர். "நீங்க பார்த்து வளர்ந்த பையன்.. இப்போது புது கட்சி பத்தி பேசுறாப்ல.. பாத்துக்கோங்க, பைடன் பக்கம் சாய்ஞ்சிட போறான்" என்று கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து எலான் மஸ்க்குக்கு டிரம்ப் கடும் வார்னிங் கொடுத்திருக்கிறார்.
"பைடன் கட்சி பக்கம் போனால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். முன்னெப்போதைவிடவும் இப்போது குடியரசு கட்சி ஒன்றாக இருக்கிறது. எலான் மஸ்க்குடன் நடக்கும் பிரச்சனையை சரி செய்யும் எண்ணம் இல்லை. எனக்கு நிறைய வேலை கெடக்கு. இதெல்லாம் சரி செய்ய டைம் இல்லை" என்று பேசியிருக்கிறார்.
இந்த பேச்சு எலான் மஸ்க்கை மேலும் சீண்டியிருக்கிறது. டிரம்புக்காக எலான் மஸ்க் ரூ.2,505 கோடியை தேர்தலில் வாரி இறைத்திருக்கிறார். இதற்காக சில சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியாக டீலிங் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் இரு தரப்புக்கும் இடயே மோதல் வெடித்திருக்கிறது. எப்படியெல்லாம் ஒன்னு மண்ணா இருந்தவர்கள், இப்போது எலியும், பூனையுமாக மாறியிருக்கிறார்களே! என பலரும் பேசி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications