மடக்க முடியாட்டி.. அப்படியே விட்டு விடுவதா.. மறுபடியும் சர்ச்சையில் டிரம்ப்
குடையை மடக்காமல் விமானத்திற்குள் அதிபர் ட்ரம்ப் நுழைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

வாஷிங்டன்: சர்ச்சைகளின் ஹீரோ ட்ரம்புக்கும், குடைக்கும் மட்டும் என்ன எப்பவுமே ஏழாம் பொருத்தம்தானோ?
இப்படித்தான் மேரிலாண்ட் விமானத்தில் இருந்து இறங்கும் போது, காற்று பலமான அடிக்க, அந்த நேரம் பார்த்து கையில் வைத்திருந்த குடையை ட்ரம்ப் விரிக்கவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் அந்த குடையுடன் திண்டாடி மல்லுக்கட்டியதை உலகமே பார்த்தது.
[வியாழனுக்கு அருகில் மிதக்கும் பச்சை நிற மர்ம பொருள்.. ஏலியன் விமானமா?.. நாசாவின் திக் போட்டோ! ]

ட்ரோல் வீடியோ
அதேபோல, வெள்ளை மாளிகையில் மழையில் தன் மனைவியை நனையவிட்டு குடையை தனக்கு மட்டும் பிடித்து கொண்ட ட்ரம்ப் வீடியோ வைரலானது. இப்போது திரும்பவும் அதிபர் பற்றின ஒரு குடை பஞ்சாயத்துதான் ட்ரோல் ஆகி வருகிறது

குடைபிடித்து ஏறுகிறார்
வாஷிங்டன் டிசியில் இருக்கும் விமான தளவாடம் ஆண்ரூஸ் ஏர்ஃபோர்ஸ் ஒன். இந்த விமான நிலையத்தில் ஏறுவதற்காகத்தான் அதிபர் வந்தார். "எதிர்கால அமெரிக்க உருவாக்கம்" பற்றி முக்கிய கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுவதற்காக வருகிறார். இங்கு விமானத்தில் ஏறிதான் அந்த கருத்தரங்கத்தில் பேச வேண்டும். ஆனால் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறும்போது குடைபிடித்து கொண்டே ஏறுகிறார்.
— Jon Wurster (@jonwurster) October 27, 2018 |
மடக்கவே இல்லை
மொத்த படிக்கட்டுகளில் ஏறியபின் ட்ரம்ப் குடையை மடக்கவில்லை. அப்படியே விமானத்துக்குள் குடையை பிடித்து கொண்டு போக முயற்சிக்கிறார். ஆனால் குடை உள்ளே போகாது என்று தெரிந்தபிறகு, குடையை அப்படியே வெளியே விட்டுவிட்டு விமானத்துக்குள் சென்றுவிடுகிறார். அந்த குடையை ட்ரம்ப் மடக்கி கூட வைக்கவில்லை. அதிபருக்கு பின்னால் சென்ற மற்றொருவரும் அந்த குடையை மடக்கவே இல்லை. அவரும் விமானத்துக்கு உள்ளே சென்றுவிடுகிறார்.

72 வயதாகிறது
கடைசியாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மட்டும் அந்த குடையை எடுத்து மடக்கி விமானத்துக்குள் வைத்துவிட்டு போகிறார். இந்த வீடியோதான் உலகம் முழுதும் ரவுண்டு கட்டி பறக்கிறது. 72 வயதாகிறது, ஒரு குடையை மடக்க தெரியாதா? என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். குடையை மடக்க முடியாமல் வெளியே விட்டு செல்கிறார் ட்ரம்ப், இதை ஒரு குழந்தையிடம் கேட்டால்கூட அது சொல்லி தருமே என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications