H-1b விசாவுக்கு மட்டும் நோ நோ.. ஆபாச பட நடிகைகளுக்கு விசாவை அள்ளி தரும் அமெரிக்கா.. என்ன காரணம்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு விசாவுக்கான கெடுபிடிகள் அதிகரித்துவிட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆபாசப் படப் பிரபலங்கள் அமெரிக்க விசா பெறுவது அதிகரித்துள்ளதாம். ஆபாசப் படப் பிரபலங்களுக்கு மட்டும் எப்படி ஈஸியாக விசா கிடைக்கிறது.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் செல்கிறார்கள். டிரம்ப் வந்த பிறகு ஹெச்-1பி விசா உள்ளிட்ட விசாக்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டாலும் கூட ஓ-1பி விசாவில் அமெரிக்கா செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஓ-1 விசா
இந்த ஓ-1பி விசா என்பது கலை, அறிவியல், வணிகம், கல்வி அல்லது விளையாட்டுத் துறைகளில் சிறப்பான திறமைகளைக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும். கடந்த காலங்களில் எப்போதும் கலை துறையில் புகழ்பெற்று விளங்குவோர், சினிமா நட்சத்திரங்கள், பாப் பாடகங்கள் உள்ளிட்டோர் இந்த விசாக்களை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு அதிகம் செல்வார்கள். ஆனால், இப்போது நிலைமை மொத்தமாக மாறியிருக்கிறது.
இப்போது இந்த ஓ-1 விசா கோரி விண்ணப்பிப்போரில் கிட்டத்தட்ட 50%க்கு மேல் influencers எனப்படும் சமூக வலைத்தளப் பிரபலங்கள் மற்றும் ஒன்லி பேன்ஸ் தளப் பிரபலங்களே இருக்கிறார்களாம். வழக்கமான பாடகர்கள் அல்லது நடிகர்களுக்கு உண்மையில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மதிப்பிடுவது கடினம்.. ஆனால், இதுபோன்ற சமூக வலைத்தளப் பிரபலங்களின் செல்வாக்கை மதிப்பிடுவது அதிகம். அவர்கள் கணக்கை எத்தனை பேர் பாலோ செய்கிறார்கள்.. எவ்வளவு வியூஸ், வருவாய் வருகிறது என்பதை வைத்து எளிதாகக் கணக்கிட முடியும். இதுவே மாற்றத்திற்கு முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.
மொத்தமாக மாறியது
இந்த ஓ-1 விசாவை பொறுத்தவரை அது 2000களில் இருந்தே தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட 2008-09 காலகட்டத்தில் விசா எண்ணிக்கை சற்று சரிந்திருந்தது. இருப்பினும், அடுத்தாண்டே அது மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. கொரோனா காலத்தில் இந்த விசாக்கள் மிகக் கடுமையாகச் சரிந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
முன்பெல்லாம் உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விசா இப்போது சமூக வலைத்தள பிரபலங்களுக்கே அதிகம் ஒதுக்கப்போகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஒரு புதிய சகாப்தத்தின் அடையாளமாக உள்ளது. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
ஆபாச பட தளம்
இதில் கவனிக்க வேண்டியது ஒன்லிபேன்ஸ் தள மாடல்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் தான். ஒன்லி பேன்ஸ் என்பது கடந்த 2016ல் தொடங்கப்பட்ட ஒரு தளம். பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இந்தத் தளத்தை உருவாக்கினார்கள். ஒவ்வொரு பிரபலத்தையும் பாலோ செய்யத் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். அந்தப் பிரபலமும் எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள் போட்டோக்களை பகிர்வார்கள்.
முதலில் அனைத்துத் தரப்பினருமே இதில் வந்தாலும் சீக்கிரமே ஆபாசப் பட உலகமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு தளமாக மாறியது. இப்போது இந்தத் தளத்தில் வரும் பெரும்பாலான வீடியோக்கள் ஆபாசப் படங்களாகவே உள்ளன. இதைப் பலரும் ஆபாசப் படத் தளம் என்றே கருதுகிறார்கள். இந்தத் தளத்தில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட இப்போது அதிக விசாக்கள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்
ஒரு பக்கம் அமெரிக்கா ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு கடிவாளம் போடும் அதேநேரம் ஆபாசப் பட மாடல்களுக்கு விசா கொடுப்பது பேசுபொருள் ஆகியுள்ளது. அதேநேரம், ஹெச்-1பி உள்ளிட்ட இதர விசாக்களுடன் ஒப்பிடுகையில் ஓ-1 விசா மிகக் குறைவு என்பதால் இரண்டையும் ஒப்பிடுவதில் லாஜிக் இல்லை என்ற விளக்கத்தையும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications