சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் அவ்வளோதான்.. வரியை காட்டி கனடாவை பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப்
வாஷிங்டன்: சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் உடனடியாக 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கனடாவை எச்சரித்துள்ளார். சீனப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான தளமாக கனடாவை மாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் டிரம்ப் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி காட்டி வருகிறார். அமெரிக்க நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன் என தேர்தல் பிரசாரத்தில் முழங்கிய டிரம்ப், பதவியேற்றதும் பல்வேறு நாடுகளின் மீது பரஸ்பர வரி என்ற பெயரில் வரிகளை போட்டு தாக்கினார். இந்தியா மீதும் 50 சதவீதம் அளவுக்கு வரியை விதித்தார்.

தனது பேச்சை கேட்காத நாடுகள் மீது எல்லாம் வரி விதிப்பேன் எனக்கூறி மிரட்டி வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் என்றால், கனடா, கிரீன்லாந்து விவகாரத்திலும் டிரம்பின் பேச்சுகள் உலகநாடுகளை அதிர வைப்பதாகவே உள்ளன.
கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இணைக்கலாம் என்று பேசி அதிர வைத்த டிரம்ப், கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றுவேன் எனவும் கூறி வருகிறார். இத்தகைய பரபரப்புக்கு இடையே கனடாவுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னியை நேரடியாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்காவிற்குள் தனது பொருட்களை சீனா கொண்டு வர கனடாவை ஒரு 'இறக்குமதித் தளமாக' மாற்றப் போகிறேன் என்று கார்னி நினைத்தால் அவர் மிகவும் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார். கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தினால் உடனடியாக 100 சதவீத வரி விதிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications