டாப் சீக்ரெட்! டிரம்ப் விழாவில் மிஸ்ஸாகும் "அந்த" Designated survivor! விபரீதம் நடந்தால் இவரே அதிபர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இன்னும் சில மணி நேரத்தில் டிரம்ப் பதவியேற்கும் நிலையில், இந்த நிகழ்வில் யார் பங்கேற்கிறார்கள்.. யார் பங்கேற்க போவதில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் டிரம்பின் சொந்த கட்சியில் இருந்து ஒருவர் மட்டுமே பங்கேற்க மாட்டார். அவர் தான் designated survivor. அதென்ன designated survivor. இவர் மட்டும் ஏன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் இன்னும் சில மணி நேரத்தில் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

donald trump inauguration donald trump

மாஜி அதிபர்கள்:

இதுவரை நடந்த பதவியேற்பு விழாக்களை போலவே இந்த விழாவிலும் தற்போது அதிபர் பதவியில் இருந்து விலகும் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இது மட்டுமின்றி முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

சர்வதேச தலைவர்கள்

கடந்த காலங்களில் அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் யாரும் பங்கேற்றது இல்லை. ஆனால், இந்த முறை சீனா, எல் சால்வடார் மற்றும் அர்ஜென்டினா அதிபர்களுக்கும் இத்தாலி மற்றும் ஹங்கேரியின் பிரதமர்களுக்கும் டிரம்ப் டீம் அழைப்பு விடுத்திருந்தது. அதில் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே,ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, எல் சால்வடார் அதிபர் நயிப் புகேலே ஆகியோர் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

இந்தியா சார்பில் யார்:

இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் கலந்து கொள்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இருப்பினும், சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார். ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா சார்பில் அந்தந்த நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு டிரம்பின் முதல் பதவியேற்பு விழாவில் மொத்தம் 67 ஜனநாயகக் கட்சி தலைவர்கள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த ஆண்டும் கூட முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.

Designated Survivor:

இது போக Designated Survivor என்று ஒருவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார். பொதுவாக இந்த designated survivor என்பவர் ஆளும் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவராக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நபராக இருப்பார். இவரும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார். அதென்ன designated survivor என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

இந்த பதவியேற்பு விழாவில் அதிபர், துணை அதிபர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி என அனைவரும் பங்கேற்கிறார்கள். இதுபோல அனைவரும் பங்கேற்கும் நிகழ்வில் எதாவது விபரீதம் அல்லது பேரழிவு ஏற்பட்டால் இந்த designated survivor கைக்கு அதிபர் பதவி வரும். முக்கிய தலைவர்கள் இல்லாத சூழலில் designated survivor அதிபராக பதவியேற்று நாட்டை வழிநடத்துவார். இவர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருக்க மாட்டார். மாறாக பாதுகாப்பான ஒரு இடத்தில் சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருப்பார்.

யார் அவர்? எங்கே இருப்பார்?

பொதுவாக ஆளும் கட்சியில் இருந்து அமைச்சரவையில் இருக்கும் ஒருவரும் எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரும் designated survivorஆக தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒருவர் designated survivorஆக இருப்பார். யார் அவர்! எங்கே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாது. அதன்படியே இந்த முறையும் டிரம்ப் கட்சியிலும் designated survivor மட்டும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+