டிரம்ப் பாக்கெட்டில் 'வீட்டோ'! அதிகாரத்தை கையில் எடுத்து ஆடப்போகும் அதிபர்! வெடிக்கப்போகும் பிரச்சனை
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளையும் எதிர்க்கட்சி (ஜனநாயக கட்சி) கைப்பற்றியிருக்கிறது. இதனால் புதிய சட்டங்களை எளிதாக போட்டுவிட முடியும் என்று சொல்லப்பட்டாலும்.. அதிபர் டிரம்பிடம் உள்ள 'பாக்கெட் வீட்டோ' இதை தடுக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது இனி வரும் 2 ஆண்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரிய பூகம்பங்கள் வெடிக்க இருக்கின்றன.
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளில்தான் அமெரிக்க நாட்டுக்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்படி உருவாக்கப்படும் சட்டத்தை அதிபருக்கு பிரதிநிதிகள் அனுப்பி வைப்பார்கள்.

அதிபர் என்பவர் இந்த இரண்டு அவைகளின் பிரதிநிதிகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால், இது தேர்தலில் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை டிரம்ப் ஏற்கனவே உணர்ந்து இருந்தார். எனவேதான் தேர்தல் என்னை கட்டுப்படுத்தாது என்று ஏற்கனவே அளித்த பேட்டியில் தெளிவாக கூறியிருக்கிறார்.
அவர் இப்படி சொல்வதற்கு பின்னால் 'வீட்டோ' எனும் அதிகாரம் காரணமாக இருக்கிறது. வீட்டோ என்றால் மறுப்பானை என்று அர்த்தம். புதியதாக சட்டத்தை உருவாக்கும் போது, இந்த 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி.. இந்த சட்டத்தை அதிபரால் ரத்து செய்துவிட முடியும். ஆனால், இது எப்படி நடக்கும்? இது எதார்த்தத்தில் சாத்தியமா? என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன.
அதிபருக்கான பவர்
அமெரிக்க நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளால் புதியதாக ஒரு சட்டம் உருவாக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த சட்டத்தை அமலாக்க.. அதிபரின் கையெழுத்து அவசியம். இதற்காக அந்த சட்ட வடிவம், அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும். சட்டம் கைக்கு வந்த 10 நாட்களுக்குள்.. அதாவது ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, 10 நாட்களுக்குள் அதிபர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையெனில், ஆட்சபனைகளுடன் நாடாளுமன்றத்திற்கே அந்த சட்டத்தை திருப்பி அனுப்ப வேண்டும். ஒருவேளை அவர் திருப்பி அனுப்பாமல்.. 10 நாட்கள் கடந்துவிட்டது எனில், அதிபரின் கையெழுத்து இல்லாமலேயே சட்டம் அமலுக்கு வந்துவிடும்.
ரூல்ஸை மீறிய பவர்
இதையெல்லாம் தவிர்த்து, 3வதாக ஒரு ஆப்ஷன் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் 'பாக்கெட் வீட்டோ'. அதாவது, நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மீதம் இருக்கிறது. இந்த காலத்தில், ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு.. அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போட.. அவருக்கு 10 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஆனால், இந்த 10 நாட்களுக்குள் 5 நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்து விடுகிறது. இந்த சூழலில் சட்டத்திற்கு அதிபர் கையெழுத்து போடவில்லை என்றால்.. அந்த சட்டம் தானாகவே காலாவதி ஆகிவிடும். இதற்கு பெயர்தான் 'பாக்கெட் வீட்டோ'.
பொதுவாக நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க டிரம்புக்கு விருப்பம் இல்லை எனில், மறுப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதுவார். கடிதத்தை வைத்து.. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் சட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்து மீண்டும் அனுப்பி வைக்கும்.
ஆனால், கூட்டத்தொடர் முடிவடைய 5 நாட்களே இருக்கும்போது ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு.. ஒப்புதலுக்கு அனுப்பினால், அதற்கு டிரம்ப் மறுப்பும் தெரிவிக்காமல், ஒப்புதலும் அளிக்காமல் இருந்தால்.. இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் போதுமான நாட்கள் இருக்காது. எனவே சட்டம் தானாக காலாவதி ஆகிவிடும்.
இந்த அதிகாரத்தை, அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு டிரம்ப் பயன்படுத்துவார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதன் மூலம், முக்கியமான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்.. கிடப்பில் போட்டு ஒன்னும் இல்லாமல் ஆக்கி விடுவார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் பெரிய பெரிய பஞ்சாயத்துகள் வெடிக்க இருக்கின்றன.




Click it and Unblock the Notifications
