டிரம்ப் தெரியும்.. அதென்ன $TRUMP? சாதாரண மீமை வைத்து புதிய உச்சம்.. மிரண்டு நின்ற கிரிப்டோ சந்தை!
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் நாளைய தினம் பதவியேற்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் அமெரிக்காவையே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்தச் சூழலில் தான் நேற்று சனிக்கிழமை டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ மீம் க்ரிப்டோகரன்சியை அறிமுகம் செய்தார். $TRUMP என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கிரிப்டோகரன்சி அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப் பெரியளவில் ஏற்றம் கண்டு வர்த்தகமானது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் நாளை ஜனவரி 20ம் தேதி பதவியேற்கிறார். இதற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல சர்வதேச தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டிரம்ப் இப்போது தனது சொந்த மீம் கிரிப்டோகரன்சியை வெளியிட்டுள்ளார். அதென்ன மீம் கிரிப்டோகரன்சி.. இது எந்தளவுக்கு வர்த்தகமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மீம் கிரிப்டோ:
புதிய மீம் கிரிப்டோ குறித்த அறிவிப்பை தனது சொந்த சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் அவர் வெளியிட்டார். மேலும், அந்த கிரிப்டோவை வாங்கும் லிங்கையும் அவர் தனது பக்கத்தில் பகிர்ந்தார். அதில் அவர், "எனது புதிய அதிகாரப்பூர்வ டிரம்ப் மீம் கிரிப்டோ வந்துவிட்டது. எங்களுக்கு ஆதரவாக நின்ற அனைவரும் கொண்டாட வேண்டிய நேரம் இது. வெற்றியைக் கொண்டாடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

$TRUMP எனப்படும் இந்த கிரிப்டோ கரன்சி சந்தைக்கு வந்த உடனேயே அதன் மதிப்பு பயங்கர வேகமாக உயர்ந்ததாக எகானமிக் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையில் அறிமுகமான சில மணி நேரத்திலேயே இதன் மதிப்பு 220 சதவீதம் உயர்ந்து, 4.25 பில்லியன் டாலர்களை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உச்சம்:
சோலானா நெட்வொர்க்கில் வெளியிடப்பட்ட இந்த நாணயத்தின் வர்த்தகம் சுமார் 1 பில்லியன் டாலர் வரை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடக்கத்தில் 0.18 டாலராக மட்டுமே இருந்தது. ஆனால், பலரும் இதை வாங்க ஆர்வம் காட்டவே இதன் மதிப்பு மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 7.10 டாலர் வரை சென்றது. டிரம்ப் ஆதரவாளர்களே இதை அதிகளவில் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கிரிப்டோ:
இது விற்பனைக்கு வந்த தொடக்கத்தில் ஒருவர் சுமார் 60 லட்சம் $TRUMP நாணயங்கள் வெறும் 11 லட்சம் டாலருக்கு வாங்கினார். அவரது முதலீடு வெறும் சில மணி நேரத்தில் 2.3 கோடி டாலராக உயர்ந்ததாக கிரிப்டோ டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 100 கோடி $TRUMP டோக்கன் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக இப்போது 20 கோடி டோக்கன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மீதமுள்ள 80 கோடி டோக்கன்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு கட்டமாக விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.
அதென்ன மீம் கரன்சி
கிரிப்டோகரன்சிகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த மீம் கிரிப்டோகரன்சி. இணையத்தில் டிரெண்டாகும் ஒரு மீமை அடிப்படையாக உருவாக்கப்படுவதே இந்த மீம் கிரிப்டோகரன்சி ஆகும். டிரம்பின் இந்த $TRUMP கிரிப்டோ என்பது டிரம்பின் புகழ்பெற்ற தேர்தல் புழக்கமான "Fight, Fight, Fight" என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் வைத்து டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்தது. துப்பாக்கிக் குண்டு அவரது காதை உரசிச் சென்றது. ரத்தம் வழியும் போது எழுந்த டிரம்ப் முதலில் உச்சரித்த வார்த்தைகள் தான் இந்த "Fight, Fight, Fight" ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications