ரஷ்யா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி.. ஆபத்தில் உள்ள நாடுகள், தீவுகள் எதெல்லாம்.. முழு லிஸ்ட்
வாஷிங்டன்: ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஹவாய் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹொனலுலுவில் சுனாமி எச்சரிக்கை ஒலித்தது. ஹோக்கைடோவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நெமுரோவை சுமார் 30 சென்டிமீட்டர் உயரமுள்ள சுனாமி தாக்கியது. உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதன் முழு விவரங்களை பார்க்கலாம்.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி (TSunami) தாக்கியது. இதன் காரணமாக 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து கடற்கரையை தாக்கின.. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து நொறுங்கின.

பல தீவு நாடுகளுக்கு எச்சரிக்கை
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தூரக் கிழக்கு கம்சட்கா தீபகற்ப பகுதியில் 4 மீட்டர் (13 அடி) உயரம் வரை சுனாமி அலைகளை உருவாக்கியது. இதனால் அப்பகுதி மற்றும் ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பசிபிக் முழுவதும் ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல தீவு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்ட இடங்கள்:
3 மீட்டருக்கு மேல் சுனாமி அலைகள்:
* ஈக்வடார்
* ரஷ்யா
* வடமேற்கு ஹவாய் தீவுகள்
1 முதல் 3 மீட்டர் வரை சுனாமி அலைகள்:
* சிலி
* கோஸ்டாரிகா
* பிரெஞ்சு பாலினீசியா
* குவாம்
* ஹவாய்
* ஜப்பான்
* ஜார்விஸ் தீவு
* ஜான்ஸ்டன் அட்டோல்
* கிரிபாட்டி
* மிட்வே தீவு
* பால்மைரா தீவு
* பெரு
* சமோவா
* சாலமன் தீவுகள்
0.3 முதல் 1 மீட்டர் வரை சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள்:
அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, சூக், கொலம்பியா, குக் தீவுகள், எல் சால்வடார், பிஜி, குவாத்தமாலா, ஹவுலேண்ட் மற்றும் பேக்கர் தீவுகள், இந்தோனேசியா, கெர்மடெக் தீவுகள், கோஸ்ரே, மார்ஷல் தீவுகள், மெக்சிகோ, நௌரு, நியூ கலிடோனியா, நியூசிலாந்து, நிகரகுவா, நியூ, வடக்கு மரியானா தீவுகள், பலாவ்
பனாமா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், பிட்காயின் தீவுகள், போன்பீ, தைவான், டோகெலாவ், டோங்கா, துவாலு, வனுவா, வேக் தீவு, வாலிஸ் மற்றும் ஃபுடுனா, அமெரிக்க சமோவா, யாப்.
0.3 மீட்டருக்கும் குறைவான சுனாமி அலைகள் ஏற்படக்கூடிய இடங்கள்:
புருனே
சீனா
வட கொரியா (டிபிஆர்கே)
மலேசியா
தென் கொரியா (கொரிய குடியரசு)
வியட்நாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications