பள்ளி to ஆபீஸ்! டப்பர்வேர் இல்லாத இடம் இல்லை.. ஆனால் இப்போ மொத்த சாம்ராஜ்ஜியமும் திவால்! என்னாச்சு
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற டப்பர்வேர் நிறுவனம் இப்போது மிக மோசமான பொருளாதார சூழலில் தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் டப்பர்வேர் நிறுவனத்தின் சூழல் முன்னேறாத நிலையில், இப்போது டப்பர்வேர் நிறுவனம் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ளது. டப்பர்வேர் நிறுவனத்தின் கடன் சமாளிக்கவே முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
நம்மில் பெரும்பாலானோர் டப்பர்வேர் நிறுவனம் குறித்துக் கேள்விப்பட்டு இருப்போம். பள்ளி, கல்லூரிகள் படிக்கும் போது டப்பர்வேர் பாக்ஸில் தான் மதிய உணவு எடுத்துச் சென்று இருப்போம்.

டப்பர்வேர் நிறுவனம்: இதற்கிடையே டப்பர்வேர் நிறுவனம் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக டப்பர்வேர் நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், பல நிறுவனங்கள் டப்பர்வேரை போலவே டப்பாக்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் போட்டி கடுமையாகி விற்பனை குறைந்துள்ள நிலையில், திவால் ஆவதாக சாப்டர் அத்தியாயம் 11 திவால் நிலைக்கு டப்பர்வேர் விண்ணப்பித்துள்ளது.
இது குறித்து டப்பர்வேர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில் தங்கள் நிறுவனத்திற்கு $500 மில்லியன் முதல் $1 பில்லியன் வரை சொத்து இருப்பதாக டப்பர்வேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் $1 பில்லியன் முதல் $10 பில்லியன் வரையிலான கடன்களை இருப்பதாக டப்பர்வேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, நிறுவனத்தை விற்று கடனை செட்டில் செய்யவும், திவால் நடவடிக்கைகளின் போது தொடர்ந்து செயல்படவும் அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
விற்பனை சரிவு: கடந்த 1946ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த டப்பர்வேர் நிறுவனம் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்தியா உட்பட பல நாடுகளில் இதன் விற்னை உச்சம் தொட்டு இருந்து. இருப்பினும், கடந்த 2020 முதல் டப்பர்வேர் நிறுவனத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கியது. விற்பனை முன்பு போல இல்லாமல் சரிந்தது. இதனால் விற்பனை குறைந்தது.
கடந்த ஜூன் மாதம் நிலைமை மிக மோசமானது. இதனால் அமெரிக்காவில் இருந்த தனது ஒரே தொழிற்சாலையும் டப்பர்வேர் முடியது. மேலும், 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதன் பிறகு நிறுவனத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், எதுவும் பலன் தரவில்லை.
கால அவகாசம்: $700 மில்லியன் கடன் இருந்த நிலையில், அதைத் திருப்பி தரக் கடன் வழங்கியவர்கள் கொஞ்சம் காலஅவசாகம் கொடுத்தனர். இருப்பினும், எதுவும் பலன் தரவில்லை. இதையடுத்தே டப்பர்வேர் நிறுவனம் இப்போது திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ளது.
டப்பர்வேர்: 1946ம் ஆண்டு டப்பர்வேர் நிறுவனத்தை ஏர்ல் டப்பர் என்பவர் உருவாக்கினார். அதன் பிளாஸ்டிக் பொருட்களைப் பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் ஒரு காலத்தில் அமெரிக்கா முழுக்க உள்ள வீடுகளில் டப்பர்வேர் பொருட்களே அதிகம் இருந்தது. குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளில் டப்பர்வேர் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாகவே மார்கெட்டில் இருந்தது. அதைப் பயன்படுத்தியே அவர் இதுபோன்ற லன்ச் பாக்ஸ், ஸ்டோரேஜ் பாக்ஸ்களை உற்பத்தி செய்தார். அதுவே மிகப் பெரியளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications