இந்தியா உட்பட பல நாடுகளில் முடங்கியது ட்விட்டர் தளம்.. பயனாளர்கள் தவிப்பு
வாஷிங்டன்: சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் முடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.43 இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் முடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் தளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளதாக DownDetector.com தளத்தில் சில பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர். ட்வீட்கள் லோட் ஆகவில்லை என்றும் "Something went wrong. Try reloading" போன்ற மெசேஜ்கள் வருவதாகவும் பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, பீனிக்ஸ் மற்றும் சியாட்டில் பகுதிகளில் ட்விட்டர் தளத்தை அணுகுவதில் சிக்கல்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் தளம் இப்படி திடீரென முடங்குவதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சில பயனாளர்கள் ட்விட்டர் தளம் லோட் ஆனாலும் ரீட்வீட் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட பயன்படுத்த முடிவதில்லை எனப் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிக்கல் ஏற்படிக்கிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இதர தளங்களில் பயனாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications