சட்டென கமலா ஹாரிஷின் கணவருக்கு உதட்டோடு முத்தம் கொடுத்த ஜோ பைடன் மனைவி.. ரியாக்சன் வேறலெவல்
வாஷிங்டன்: செவ்வாய்கிழமை அன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். இந்த உரையை தொடங்கும் முன்பு ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாஃப்க்கு திடீரென உதட்டில் முத்தமிட்டார். இதை பார்தது பலரும் பலமாக கைத்தட்டி கரவொலி எழுப்பினர்.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை அதிக உறுப்பினர்களுடன் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது குடியரசுக்கட்சி. ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரான ஜோ பைடன் கட்சி அங்கு மெஜாரிட்டியை அண்மையில் பறிகொடுத்துள்ளது.
இந்த சூழலில் அதிபர் ஜோ பைடன் கேபிடாலில் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அது பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பேசினார். உக்ரைன் ரஷ்யா மோதல் குறித்தும் பேசிய பைடன், பூமியில் உள்ள மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்க பொருளாதாரம் நல்ல வளர்ச்சி நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

கடும் சவால்
மேலும் பைடன் கூறுகையில், நமது இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தல் விடுத்தால், நமது நாட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என்றும், சீனாவுடனான போட்டியில் வெல்வது நம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உலகம் முழுவதும் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது, பலவீனமாக இல்லை என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

வாழ்த்து
முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹவுஸ் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வாழ்த்திவிட்டு தனது உரையை அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கினார், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்தும் பேசினார்.
சபையின் முதலாவது கறுப்பினக் கட்சித் தலைவரும் சபையின் சிறுபான்மைத் தலைவருமான ஹக்கீம் ஜெப்ரிஸையும் அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்தார்.

பைடன் மனைவி
இந்த உரையை தொடங்கும் முன்பு அமெரிக்க அதிபரின் மனைவியான ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஷின் கணவரான டக் எம்ஹாஃப்க்கு உதட்டில் முத்தம் கொடுத்தார். இதை பார்த்து பலத்த சத்தத்துடன் உற்சாகத்துடன் அங்கிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

கிண்டல்
பென்னி ஜான்சன் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்துதான் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். கமலா ஹாரிஷின் ரியாக்சன் இதற்கு எப்படி இருக்கும் என்று கூறி கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் ஜோ பைடனின் ரியாக்சன் இப்படித்தான் இருக்கும் என்றும் சில பதிவுகளையும் மீம்களையும் போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications