அமெரிக்காவில் கடையில் பொருட்களை திருடி கையும் களவுமாக சிக்கிய இந்திய மாணவிகள்.. போலீசிடம் கெஞ்சல்
வாஷிங்டன்: ஹைதராபாத் மற்றும் குண்டூரைச் சேர்ந்த இந்திய கல்லூரி மாணவிகள் அமெரிக்காவின் ஹோப்பகன் ஷாப்ரைட் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் திருடியதாக கைது செய்யப்பட்டனர். மார்ச் 19 அன்று நடந்த இந்த சம்பவம் குறித்து இப்போது தான் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீஸ் தங்களை கைது செய்ய வந்த போது, தெலுங்கு மாணவிகள் இருவரும், எடுத்த பொருளுக்கு இரட்டிப்பாக பணம் கொடுப்பதாகவும், இந்த குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டோம் என்று கெஞ்சியுள்ளார்கள்.. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மாணவிகளின் முகத்தை போலீசார் வெளியிடவில்லை..

அமெரிக்காவிற்கு தான் பல இந்திய மாணவ மாணவிகள் படிக்க செல்கிறார்கள்.. கல்விக்காக செல்லும் அவர்கள்.. அங்கு நல்ல வேலையில் சேர்ந்து செட்டில் ஆகிவிடுகிறார்கள்.. அதேபோல் நன்கு படித்து திறமையான ஐடி பணியாளர்கள் அமெரிக்காவில் போய் செட்டில் ஆகிறார்கள்... அப்படி செட்டிலான பலர் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.. வறுமையில் கஷ்டப்பட்ட பலர் படித்து அமெரிக்காவில் என்ஜினியர்களாகவும், டாக்டர்களாகவும் வேலை செய்கிறார்கள். அமெரிக்காவில் படிப்புக்காவும், வேலைக்காகவும் அதிகம் செல்லும் மாநிலங்கள் என்று பார்த்தால், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்ததவர்களாக இருப்பார்கள். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் அதிகம் விரும்பும் நாடாக அமெரிக்கா இருக்கிறது.
இந்நிலையில் இந்திய கல்லூரி மாணவிகள் அமெரிக்காவில் படித்து வருகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் நியூஜெர்சியில் படிக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு மாணவிகளும் கடையில் திருடியதாகக் கூறப்படும் வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்கள். அதில் 20 வயதுடைய ஹைதராபாத் மாணவி தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர் ஆவார். மற்றொருவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவி ஆவார். அவர்கள் இருவரும் வாங்கிய சில பொருட்களுக்கு பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. பொருட்களை திருடியாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து Hoboken ShopRite போலீசார் தெலுங்கு மாணவிகள் இருவரையும் கைது செய்தனர்.
கடைக்குச் சென்ற ஹோபோகன் நகரக் காவல் துறையினர் ஆந்திர மாணவிகளிடம் அவர்கள் செய்தது குற்றம் என்றும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போவதாகவும் விளக்கமளித்தனர். அப்போது மாணவி ஒருவர், பொருட்களை வாங்காமல் எடுத்ததற்காக இரட்டிப்பு பணம் தருவதாக விளக்கம் அளிக்க முயன்றுள்ளார்.
இன்னொருவர், இனிமேல் இப்படிச் செய்ய மாட்டோம், செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாரிடம் கூற முயன்றுள்ளார். ஆனால், போலீசார் அவர்களிடம் சட்ட நடைமுறைகளை விளக்கி கைது செய்தனர். இச்சம்பவம் மார்ச் 19ஆம் தேதி நடந்துள்ளது. தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications