Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க சொல்றீங்க? அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது பொழுதுபோக்கு பலூன் தானா?.. இதுக்கு பலகோடி ஆச்சே

கனடாவில் கடந்த 11 ஆம் தேதி வானில் பறந்த யுஎப்ஒ - ஒன்றை அமெரிக்காவின் எப் 22 போர் விமானம் சுட்டு வீழ்த்தியிருந்தது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த மாத துவக்கத்தில் இருந்தே வானில் மர்ம பொருள் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. கனடாவிலும் கடந்த 11 ஆம் தேதி தென்பட்ட யுஎப்ஓ-வை அமெரிக்க போர் விமானம் ஏவுகணை மூலம் வீழ்த்தியது. இந்த நிலையில், இதே நாளில் தங்களுக்கு சொந்தமான பலூன் ஒன்று மாயம் ஆகியதாக அமெரிக்காவை சேர்ந்த Balloon Brigade என்ற பொழுது போக்கு குழு கூறியுள்ளது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் கனடா நாட்டின் எல்லையொட்டி அமைந்துள்ள மொன்டானா மாகாணத்தின் வான்பரப்பில் கடந்த 1 ஆம் தேதி ராட்சத பலூன் ஒன்று பறந்தது.

அமெரிக்க வான் பரப்பில் நுழைந்த இந்த மர்ம பொருளால் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து ஜோ பைடன் உத்தரவின் பேரில் கடந்த 4-ந் தேதி போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

 ராட்சத பலூன்

ராட்சத பலூன்

அந்த பலூன் சீனா அனுப்பிய உளவு பலூன் என்றும், பல ஆண்டுகளாக இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் சீனா பலூன் மூலம் உளவு பார்த்ததாகவும் பென்டகன் குற்றம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த சீனா, அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டது, உளவு பலூன் அல்ல என்றும், வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் வழித்தவறி அமெரிக்காவுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறியது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அலாஸ்கா மாகாணத்தில் 40,000 அடி உயரத்தில் மர்ம பொருள் ஒன்று பறந்தது. இந்த மர்ம பொருளையும் அமெரிக்கா போர் விமானம் ஏவுகணையை வீசி வீழ்த்தியது.

கனடாவிலும் பறந்த மர்ம பொருள்

கனடாவிலும் பறந்த மர்ம பொருள்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அண்டை நாடான கனடா வான் பரப்பிலும் கடந்த 11 ஆம் தேதி மர்ம பொருள் ஒன்று பறந்தது. இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர அவசரமாக ஜோ பைடனை தொடர்பு கொண்டு பேசினர். இருநாட்டு ஜெட் விமானங்களும் இணைந்து அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தின. சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருளில் இருந்து சென்சார் கருவிகள் உளவு கருவிகள் இருப்பதெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. கடலில் விழுந்த பொருளின் பாகங்களை சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் கனடா ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டனர். அடுத்தடுத்து வானில் பறந்த மர்ம பொருள் அமெரிக்கா மட்டும் இன்றி உலக நாடுகள் அனைத்தையும் பரபரப்பாக்கி விட்டன. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடும் வார்த்தை மோதலும் இந்த விவகாரத்தால் ஏற்படுத்தி விட்டது.

 பொழுது போக்கு பலூனாக இருக்கலாம்

பொழுது போக்கு பலூனாக இருக்கலாம்


இப்படி இந்த மாத துவக்கத்தில் இருந்தே வானில் பறந்த மர்ம பொருள் தொடர்பான பேச்சுக்களும் அது குறித்த செய்திகளும் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பெரிய டிவிஸ்ட்டாக அமெரிக்காவின் போர் விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்திய பலூன் பொழுதுபோக்குக்காக விடப்பட்ட பலூனாக இருக்கக் கூடும் என்ற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள Balloon Brigade என்ற பொழுது போக்கு (hobby) குழு ஒன்று தங்களுக்கு சொந்தமான ஒரு சொந்தமான pico பலூன் ஒன்று அலஸ்கா மாகாணத்தில் மாயமாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. கிட்டதட்ட இதே நாளிதான் கனடாவின் யுகோன் மாகாணத்தில் பறந்த மர்ம பொருள் ஒன்றை USAF F-22 -ஜெட் விமானம் ஏவுகணை மூலமாக சுட்டு வீழ்த்தியது. $400,000 மதிப்பு கொண்ட ஏவுகணை மூலமாக மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருந்தது.

இரு நிகழ்வுகளுக்கும் தொடர்பு உள்ளதா?

இரு நிகழ்வுகளுக்கும் தொடர்பு உள்ளதா?

Balloon Brigade என்ற பொழுது போக்கு குழு கூறும் போது, " pico பலூனில் காற்றின் ஈரப்பதம் , வெப்ப நிலை, காற்றின் திசை ஆகியவற்றை அளவிடுவதற்கான கருவிகள் இருந்ததாகவும் வடக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் கடந்த 11 ஆம் தேதி அலாஸ்கா மாகாணத்தின் தென்மேற்கே அதிகாலை 1 மணியளவில் பறந்து கொண்டிருந்த போது 'K9YO' என்ற அந்த பலூன் மாயமானது" என்று சொல்லியிருந்தது. இருந்தாலும் கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் மற்றும் தங்களின் மாயமான பலூன் ஆகிய நிகழ்வுகளை பொழுபோக்கு பலூன் குழு ஒப்பிடாவிட்டாலும் மாயமானதாக சொல்லப்படும் பலூன் சென்ற திசையை வைத்து பார்க்கும் போது இந்த இரு நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்க சாத்தியம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

12 டாலர் மதிப்புள்ள பலூன்

12 டாலர் மதிப்புள்ள பலூன்

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வெறும் 12 டாலர் மதிப்பு கொண்ட பலூனை சுட்டு வீழ்த்தத தான் அமெரிக்காவின் எப்.22 போர் விமானம் மூலமாக $439,000 டாலர் மதிப்பு மிக்க ஏவுகணை பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதாக அமையும். எனினும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிகிறது. உரிய விசாரணைக்கு பிறகே அது வெறும் பொழுது போக்கு பலூன் தானா? அல்லது உளவு பலூனா? என்பது குறித்து எல்லாம் தெளிவான முடிவு தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+