ஈரானுக்கு எதிராக ஒன்று கூடும் பெரும் நாடுகள்.. அமெரிக்காவுடன் கைகோர்க்க தயார்.. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் அறிவிப்பு
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் பதிலடி ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. அமெரிக்க தளங்கள் மீதான டிரோன் தாக்குதல்களை அடுத்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பே முக்கியம் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
கீர் ஸ்டார்மர், இமானுவேல் மேக்ரான், ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர், ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகள் மீது நடத்திய "பொறுப்பற்ற" தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இந்த தாக்குதல்கள் நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குண்டுகளால் குலுங்கிய ஈரான்
தொடர்ந்து ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அமெரிக்கா நேற்று முன் தினம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது திடீரென கடுமையான தாக்குதலை தொடுத்தது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இரு நாட்டு படைகளும் கூட்டாக நடத்திய தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் பெரும் சேதமடைந்தன.
தொடர்ந்து போர் விமானங்கள் குண்டு வீசியதில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரம் குலுங்கியது. அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் என ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தன. மேலும் அன்றைய தினமே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியும் கொல்லப்பட்டார்
அமெரிக்காவுக்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆதரவு
இதேபோன்று ஈரான் ராணுவ மந்திரி அசிஸ் நாசிர்சாடே, ராணுவ தளபதி அப் துல் ரகிம் மவுசவி, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பக்பூர், ராணுவ ஆலோசகர் அலி சம்கானி என அடுத்தடுத்து தலைவர்கள் உயிரிழந்தனர். இதனால் கடும் கோபமடைந்த ஈரானும் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தலைமை அலுவலகத்தை குறிவைத்தும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்தும் ஏவுகணைகளை தொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தெரிவித்துள்ளன.
ஈரான் ஏவுகணைகளை பலவீனப்படுத்த
தங்கள் நலன்களையும், கூட்டாளிகளின் (அமெரிக்கா) நலன்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக மூன்று நாடுகளும் வலியுறுத்தின. "தேவையான மற்றும் விகிதாசார தற்காப்பு நடவடிக்கைகளை" ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளன. ஈரானின் ஏவுகணை, டிரோன் திறனை பலவீனப்படுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
இரு நாடுகளின் தீவிரப் போரால் மோசமடைந்து வரும் சூழ்நிலையைச் சமாளிக்க அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஒப்புக்கொண்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் அக்ரோடிரி ராணுவத் தளத்தை ஒரு டிரோன் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டது.
அவசர மீட்டிங்
பிரான்ஸில், கடற்படைத் தளக் முகாமில் டிரோன் தாக்கியதாக அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று தெரிவித்தார். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி தவிர, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்களும் நேற்று காணொலி அவசரகால மீட்டிங் நடத்தினர்.
அப்போது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்த அவர்கள், தங்கள் பிரதேசங்களிலும் ஜோர்டானிலும் அமெரிக்க ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications