இந்தியாவுக்கு முதல் மரியாதை.. டிரம்ப் செய்த தரமான சம்பவம்.. முதல் சீட்டில் மாஸ் காட்டிய ஜெய்சங்கர்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். இந்த விழாவில் நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்றார். அப்போது பிற நாட்டு தலைவர்களை பின்னுக்கு தள்ளி ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் சீட் வழங்கப்பட்டது. இதுதொடர்பான போட்டோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாபெரும் வெற்றியை பெற்றார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மையை பெற்றார்.

இதையடுத்து நேற்று முறைப்படி அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று கொண்டார். வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உள்ள கேபிட்டால் அரங்கத்தில் இந்த பதவியேற்பு விழா நடந்தது.
இந்த விழாவில் ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர். இந்த அரங்கத்தில் உள்ள மேடையின் நடுப்பகுதியில் மைக் வைக்கப்பட்டு இருந்தது. இந்த மைக்கின் ஒருபுறம் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் உள்பட அவரது கட்சி தலைவர்கள் இருந்தனர். இன்னொரு புறம் அதிபர் பதவியில் இருந்து விலகும் ஜோபைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்பட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் அமர்ந்து இருந்தனர்.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டொனால்ட் டிரம்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் பேசினார். இந்த விழாவில் டொனால்ட் டிரம்பின் முன்பு பிற உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.
அதில் நம் நாட்டுக்கு தான் முதல் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நம் நாட்டின் சார்பில் விழாவில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் தான் ஜெய்சங்கர் அமர்ந்து விழாவில் பங்கேற்றார்.
ஜெய்சங்கரை தொடர்ந்து ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா அமர்ந்து இருந்தார். இது இந்தியாவுக்கு கிடைத்த பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பல நாடுகளின் அதிபர், பிரதமர்கள் டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இருந்தனர். இருப்பினும் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் சீட் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் குவாட் எனும் கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்காவுடன், நம் நாடும் உள்ளது. இந்த கூட்டமைப்பில் உள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். ஆனால் அவர்களுக்கு 3வது வரிசையில் தான் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தாகேசஷி ஐவாயா, ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் ஆகியோர் 3வது வரிசையில் தான் அமர்ந்து இருந்தனர்.
இதன் மூலம் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நம் நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது. அதோடு பிற நாடுகளை காட்டிலும் நம்நாட்டுடன் சேர்ந்து செயல்படுவது தான் நல்லது என்று டொனால்ட் டிரம்ப் நினைத்து இருக்கலாம். இதனால் தான் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் சீட் வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.
மேலும் இந்த விழாவில் பங்கேற்ற ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய வாழ்த்து கடிதத்தை டொனால்ட் டிரம்பிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் விழாவில் பங்கேற்ற ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப், துணை அதிபராக ஜேடி வான்ஸ் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்'' என்று விழாவில் பங்கேற்ற போட்டோக்களை வெளியிட்டு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.அதில் பிரதமர் மோடி, ‛‛வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் எனது அன்பு நண்பர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்பதற்கு வாழ்த்துகள். மீண்டும் ஒருமுறை இருநாடுகளின் நலன்களுக்காகவும், உலகிற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கவும் சேர்ந்து பயணிப்பதை எதிர்நோக்குகிறேன். இந்த பதவியேற்பு என்பது எதிர்காலத்துக்கான வெற்றியாக அமைய வாழ்த்துகள்'' என கூறியிருந்தார்.
-
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications