கார்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக லாரி.. அதிவேகமாக வந்து மோதிய ரயில்.. அதிர்ச்சி வீடியோ
வாஷிங்டன் : கார்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக லாரி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முடியாமல் திணறியபடி நின்றது. அப்போது வேகமாக வந்த ரயில் மோதியதில் கார், காகித குப்பைகள் போல் தூக்கிவீசப்பட்டன. சில கார்கள் ரயிலின் என்ஜினில் சிக்கியது. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
Recommended Video
பார்ப்பாரை நடுங்க வைக்கும் இந்த விபத்தின் காட்சி அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவின் ஓக்லஹோமாவின் தாக்கர்வில்லில் வெள்ளிக்கிழமை அன்று அம்ட்ராக் ரயில் கார்கள் ஏற்றிய அரை லாரி மீது மோதியது.
ரயில்வே கிராசிங்கில் சிக்கிய கார்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் ரயில் தண்டவாளத்தில் நின்றுவிட்டது. கொண்டது. அதிக சுமை காரணமாக அது பாதையை கடக்க லாரியால் முடியவில்லை.

குப்பை காகிதமாய் கார்
நெருக்கமாகப் பார்த்த பிறகு, ஒரு நபர், இன்ஜின் டிரைவருக்கு சிக்னல் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், இந்த செயல் வேலைக்கு ஆகவில்லை. ரயில் அசுர வேகத்தில் வந்து மோதியதில் பாதி லாரி அப்படியே அப்பளம் போல் நொறுங்கி பறந்தது. அதில் இருந்த கார்கள் குப்பையில் விழுந்த காகிதம் போல் பறந்து போய் விழுந்தன.

விபத்தில் 5 பேர் காயம்
யூடியூப்பில் இது தொடர்பாக வீடியோவும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பேஸ்புக்கில் லவ் கவுண்டி என்ற அந்த பகுதியின் தீயணைப்பு வீரர்கள் பகிர்ந்த ஒரு தகவலின் படி, "விபத்தின் காரணமாக அம்ட்ராக் ரயிலில் இருந்த ஐந்து பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ரயில் தடம் புரண்டது
விபத்து காரணமாக "ரயில் இன்ஜினின் முன்பகுதி தடம் புரண்டதால், ரயிலின் அடிப்பகுதியில் சில இடங்களில் லேசான சேதம் ஏற்பட்டது . இதனால் ரயில் நகர முடியாமல் சிக்கி நின்று போனது. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, தண்டவாளங்கள் மற்றும் ரயிலின் சேதத்தை ஆய்வு செய்தோம்" என்று கூறியுள்ளனர்.

கலங்கும் மக்கள்
இதனிடையே விபத்து குறித்த யூடியூப் வீடியோ பல பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கார்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி டிரைவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அவருக்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள். சிலர் அவரது வலியை உணர முடிகிறது என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே டிரைவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications