“ரகசிய அணு ஆயுத சோதனை..” டிரம்ப் வைத்த திடீர் குற்றச்சாட்டு! சீனா பக்கம் வண்டியை திருப்பும் US
வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கிறது என்று சொல்லி, அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்தி, பொருளாதார தடைகளை அறிவித்திருக்கிறது அமெரிக்கா. இந்நிலையில், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனையை நடத்தியிருக்கிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனா அணு ஆயுத வெடிப்பு சோதனைகளை ரகசியமாக நடத்தியதாகவும், மேலும் அதிக வெடி திறன் கொண்ட சோதனைகளுக்குத் தயாராகி வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது சர்வதேச சோதனை தடை ஒப்பந்தங்களை மீறிய செயல் என அமெரிக்கா கூறியிருக்கிறது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் தாமஸ் டிநன்னோ இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டு
"சீனா அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது என்பதை அமெரிக்க அரசு அறிந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான டன்கள் வரையிலான வெடி திறன் கொண்ட சோதனைகளுக்கும் சீனா தயாராகி வருகிறது" என்று தாமஸ் டிநன்னோ கூறினார். 2020ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று ஒரு அணு ஆயுத சோதனையை சீனா நடத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை, கடந்த ஆண்டு இறுதியில் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 31 அன்று, ரஷ்யா மற்றும் சீனா சமமான அடிப்படையில் அணு ஆயுதங்களைச் சோதிக்கத் தொடங்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
டீகப்ளிங் முறை
சீன மக்கள் விடுதலை இராணுவம், சோதனைகள் தடை ஒப்பந்தங்களை மீறுவதை அறிந்தே அணு ஆயுத சோதனை நடத்தி தற்போது அதை மறைக்க முயன்றதாக டிநன்னோ சாடியுள்ளார். நில அதிர்வு கண்காணிப்பின் செயல்திறனைக் குறைக்கும் 'டீகப்ளிங்' எனும் முறையைப் பயன்படுத்தி, சீனா தனது நடவடிக்கைகளை உலகத்திடம் இருந்து மறைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சீனா மறுப்பு
பிரதான அணுசக்தி வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான கடைசி ஒப்பந்தமான 'புதிய ஸ்ட்ராட்' ஒப்பந்தம் நேற்று முன்தினத்துடன் காலாவதியான நிலையில், அணு ஆயுதங்களுக்கான புதிய வரம்புகளை அமைப்பதற்கு ரஷ்யா மற்றும் சீனாவுடன் மும்முனைப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் புதிய திட்டத்தை டிநன்னோ முன்வைத்தபோது இந்தக் கருத்துக்கள் வெளியாகின. இந்தக் கட்டத்தில" நிராயுதபாணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட சீனா ஏற்கனவே மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications