விண்வெளியிலும் ஆயுதங்கள் வச்சி இருக்கோம்.. முதல் முறையாக ஒப்புக்கொண்ட அமெரிக்கா! உலகிற்கே ஆபத்தா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: விண்வெளியில் ஆயுதத்தை நிலைநிறுத்தியிருப்பதாக அமெரிக்கா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கோல்டன் டோம் அமைப்பை உருவாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வரும் நிலையில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஆயுதங்களை நிலை நிறுத்தியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ள தகவல் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விண்வெளித்துறையிலும் தற்போது உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சில் தீவிரம் காட்டி வருகின்றன. விண்வெளித்துறையில் ஏற்படும் போட்டிக்கு மத்தியில் விண்வெளியில் உள்ள தங்கள் நாட்டின் செயற்கைகோள்களை பாதுகாக்கவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தி வைத்திருப்பதாக அமெரிக்கா முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

US admits Weapons deployed space admits it for the first time

விண்வெளியிலும் ஆயுதங்கள்

அமெரிக்க விமானப்படை செயலாளர் டிராய் மெய்ன்க் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- "அமெரிக்க படைகளை எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கு விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஆயுதம் அவசியம்" என்றார். அதே நேரத்தில், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

எனினும், மாறிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான விண்வெளி கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு இந்த ஆயுதம் பயன்படுத்தப்படும் என்று மட்டுமே கூறியுள்ளார். ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் வகையில் 'கோல்டன் டோம்' என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை உருவாக்குவதற்கான பணிகளில் டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வரக்கூடிய சூழலில், விண்வெளியில் அமெரிக்கா ஆயுதங்களை நிலை நிறுத்தி வைத்து இருப்பதாக வெளியாகியிருக்கக் கூடிய தகவல் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சோவியத் யூனியன்

விண்வெளியிலும் ராணுவமயமாக்கல் தொடங்கியது இன்று நேற்று அல்ல.. 1957 களிலேயே தொடங்கிவிட்டது. சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்ற செயற்கை கோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன்பிறகில் இருந்தே, அமெரிக்காவும் சோவியத் யூனியனும் செயற்கை கோள்களை ஆயுதங்களாக பயன்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் அழிப்பது தொடர்பாகவும் ஆய்வுகளை செய்து வந்தன.

விண்வெளியிலும் அணு ஆயுதங்கள் என்பது மிகப்பெரும் கவலை அளிக்கும் ஒன்றாக இருந்தது. இதையடுத்து, வல்லரசு நாடுகளும் பிற நாடுக்ளும் இணைந்து விண்வெளி ஒப்பந்தம் ஒன்றை 1967-ல் ஏற்படுத்தின. விண்வெளியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது முதல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகள் ஒப்பந்த வரம்புக்கு வெளியே வரக்கூடிய வகையிலான திறன்களை உருவாக்க முயற்சித்து வருகின்றன. எதிரிகளின் செயற்கை கோள்களை குறிவைப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

சர்வதேச அளவில் முக்கியத்துவம்

விண்வெளியில் பல ஆயிரக்கணக்கான செயற்கை கோள்கள் உள்ளன. இவை வெறும் தகவல் தொடர்பு மட்டுமின்றி வானிலை ஆராய்ச்சி, பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, வங்கி சேவை என பல துறைகளுக்காகவும் பயன்பட்டு வருகிறது. எனவே செயற்கைகோள்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவை செயல் இழக்க வைக்கப்பட்டால், மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவேதான் தற்பொது விண்வெளி பாதுகாப்பிலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இத்தகைய சூழலில், விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதாக அமெரிக்கா கூறியிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+