ஈரானை விடுங்க.. இஸ்ரேலுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்! திசை மாறும் போர்!
வாஷிங்டன்: ஈரானின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான, 'தெற்கு பார்ஸ்' மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலை கண்டித்துள்ள டிரம்ப், இனி 'தெற்கு பார்ஸ்' மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று இஸ்ரேலை எச்சரித்துள்ளார். டிரம்ப் இப்படி பேசியிருப்பது, ஈரான் போரில், அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒரே பாதையில்தான் பயணிக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
'தெற்கு பார்ஸ்' என்பது, ஈரானுக்கு மட்டும் முக்கியம் கிடையாது, மொத்த உலகத்துக்கும் ரொம்ப முக்கியம். இங்கு மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு இருக்கிறது. இதை வைத்து சுமார் 13 ஆண்டுகளுக்கு மொத்த உலகத்துக்கும் எரிபொருள் சப்ளையை செய்துவிட முடியும். எனவே இதை தாக்குவது என்பது, மொத்த உலகத்தையும் பாதிக்கும்.

எனக்கு எதுவும் தெரியாது
எனவேதான் டிரம்ப், இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் (South Pars) எரிவாயு வயல் எனப்படும் ஒரு முக்கிய தளம் மீது இஸ்ரேல் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த ஒட்டுமொத்தப் பகுதியில் ஒரு சிறிய பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலைப் பற்றி அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது.
ஈரானின் தாக்குதல்
மேலும், கத்தார் நாட்டுக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இத்தகைய தாக்குதல் நடக்கப்போகிறது என்பதும் அந்த நாட்டிற்குத் தெரியாது. ஈரானுக்கு இந்த உண்மை தெரியவில்லை. இதன் காரணமாக, நியாயமற்ற மற்றும் முறையற்ற முறையில் கத்தாரின் எல்என்ஜி (LNG) எரிவாயு நிலையத்தின் ஒரு பகுதியை ஈரான் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது
தெற்கு பார்ஸ் தளம் மீது, இனிமேல் இஸ்ரேல் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தக்கூடாது. ஒருவேளை, எவ்விதத் தவறும் செய்யாத கத்தாரை ஈரான் மீண்டும் தாக்க முடிவு செய்தால், இஸ்ரேலின் தாக்குதல் தொடரும்.
ஈரானுக்கு எச்சரிக்கை
அப்படி ஒருவேளை கத்தார் மீண்டும் தாக்கப்பட்டால், இஸ்ரேலின் உதவி அல்லது சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அமெரிக்க ஒட்டுமொத்த தெற்கு பார்ஸ் எரிவாயு வயலையும் இதுவரை ஈரான் பார்த்திராத அளவிலான தாக்குதல் நடத்தும்.
ஈரானின் எதிர்காலத்தில் இது ஏற்படுத்தக்கூடிய நீண்டகால பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இவ்வளவு பெரிய அளவிலான வன்முறையையும் அழிவையும் அனுமதிக்க நான் விரும்பவில்லை. ஆனால், கத்தாரின் எல்என்ஜி (LNG) தளம் மீண்டும் தாக்கப்பட்டால், அவ்வாறு செய்ய நான் தயங்கமாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.
போரின் போக்கு
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், "தெற்கு பார்ஸ் தளம் மீது, இனிமேல் இஸ்ரேல் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தக்கூடாது" என டிரம்ப் கொட்டை எழுத்தில் வார்னிங் கொடுத்திருக்கிறார். அதேபோல மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேலின் உதவி தேவையில்லை என்று கூறியிருப்பதும் கவனிக்க வேண்டும். இதை வைத்து பார்க்கும்போது உண்மையில் இந்த போரில் இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்துதான் பயணிக்கிறதா? அல்லது வெவ்வேறு திசையில் செல்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications