Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமேனி கொலை.. கடைசி நேரத்தில் நடந்த டிரேட்.. ரூ.4 கோடி லாபம் பார்த்த மர்ம நபர்! டிரம்ப்பாக இருக்குமோ?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மிகப் பெரிய பதற்றம் உருவாகியுள்ள சூழலில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்த தாக்குதல்களை வைத்து ஒரு நபர் ரூ.4 கோடிக்கு மேல் சம்பாதித்து இருக்கிறாராம். யார் அவர்? போரை வைத்து பணம் பார்த்த அந்த நபர் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால் பதற்றம் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தியுள்ள இந்த தாக்குதலால் அடையாளம் தெரியாத ஒருவர் பல கோடி சம்பாதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

US attack Iran Mystery Trader Earns more than 4 Crore Betting on Tehran Strikes How it s possible

பாலிமார்க்கெட்

அதாவது 'பாலிமார்க்கெட்' எனப்படும் கிரிப்டோ அடிப்படையிலான ஒரு தளம் இயங்கி வருகிறது. யூசர்கள் இங்கு நிஜ உலக நிகழ்வுகளில் "ஆம்" அல்லது "இல்லை" பங்குகளை வாங்குவர், விற்பார்கள். அதாவது இதில் உலகில் நடக்கும் பல்வேறு புவிசார் நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகளுக்காக பெட்டிங் செய்ய முடியும். அதில் சரியாகக் கணித்தவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

"Magamyman" என்ற பெயரில் இங்கும் நபரே பெரிய லாபம் பார்த்துள்ளார். ஈரான் மீது இரு நாடுகளும் பெரிய தாக்குதலை நடத்தும் என இவர் பல வாரங்களுக்கு முன்பே பெட் கட்டியுள்ளார். இதன் மூலம் சுமார் 431,146 டாலர்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த டிரெட் நடந்தபோது, சுமார் 27 சதவிகிதம் மட்டுமே போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எனச் சந்தை மதிப்பிட்டது.

மர்ம நபர்

ஏனென்றால் அப்போது சமாதான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு இருந்தது. ஓமன் வெளியுறவு அமைச்சர் கூட பேச்சுவார்த்தைகள் கைகூடும் என்று கூறியிருந்தார். ஆனால், அதையும் தாண்டி 'Magamyman' என்பவர் 235,947 டாலர்களை இதில் பெட் செய்துள்ளது. இதன் மூலமே அவருக்குப் பெரிய தொகை கிடைத்துள்ளது.

ஈரான் மட்டும்

ஏதோ அதிர்ஷ்டத்தில் ஜெயித்து இருக்கலாம் இதெல்லாம் ஒரு விஷயமா என நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மையில் இது ஒரே ஒரு முறை மட்டும் நிகழ்ந்ததல்ல. இதே நபர் அக்டோபர் 2024 முதல் ஈரானை மையமாகக் கொண்ட 88 கணிப்புகளைச் செய்துள்ளது. தாக்குதல் சூழல், பொருளாதாரத் தடை அல்லது புவிசார் அரசியல் பதட்டங்களுடன் தொடர்பாக இந்த கணிப்புகளை மேற்கொண்டுள்ளன.. கிரிப்டோ, அமெரிக்கத் தேர்தல், விளையாட்டு என மற்ற எந்தவொரு நிகழ்விலும் பெட் செய்யாத இந்த கணக்கு ஈரான் விவகாரத்தில் மட்டும் தொடர்ச்சியாக பெட் செய்து லாபம் பார்த்து வந்துள்ளது.

ஈரான் மீது ஜனவரி 31-க்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்றும் சொல்லி இந்த நபர் 278,079 டாலர்களை வென்றதாகக் கூறப்படுகிறது. அதேபோல அமெரிக்காவும் இந்த தாக்குதலில் ஈடுபடும் எனச் சொல்லி தனியாக 78,000 டாலரை சம்பாதித்து இருக்கிறது. எல்லாவற்றையும் விட பொதுமக்களுக்குத் தாக்குதல் குறித்துத் தெரிய வருவதற்கு 71 நிமிடங்களுக்கு முன்பு இந்த கணக்கு வேறு ஒரு டிரேட்டை வாங்கியுள்ளது.

ரூ.4 கோடி

அப்போது அதில் வெறும் 17% மட்டுமே வாய்ப்பு இருந்தது. 87,000 டாலருக்கு அதை அந்த மர்ம நபர் வாங்கிய சூழலில், சில மணி நேரத்தில் அது 5 லட்சம் டாலருக்கு அதிகமான தொகையாக மாறியுள்ளது. அதாவது மொத்தமாக சுமார் 4 கோடிக்கும் மேல் இந்த நபர் சம்பாதித்து இருக்கிறார்.

டிரம்ப் தொடர்பு

இதற்கிடையே இந்த மர்ம கணக்கிற்கும் 'டிரம்ப்' தொடர்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த 'பாலிமார்க்கெட்டின்' ஆலோசனை வாரியத்தில் டிரம்ப் ஜூனியர் அங்கம் வகிக்கிறார். அவரது நிறுவனம் கடந்த ஆண்டு இந்த தளத்தில் கணிசமாக முதலீடு செய்தது. அமெரிக்க நீதித்துறை மற்றும் கமோடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன் ஆகிய இரண்டும் இந்த 'பாலிமார்க்கெட்' மீது தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தன. ஆனால், டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த விசாரணைகள் கைவிடப்பட்டது.

இந்த "Magamyman" கணக்கை அமெரிக்க அதிகாரி அல்லது அங்குள்ள அரசியல் தலைவர் தான் பயன்படுத்துகிறார் என்பதை உறுதியாகச் சொல்ல எந்தவொரு ஆதாரமும் இல்லை. இருப்பினும், அதன் தோற்றம், துல்லியமான பெட், தொடர்ச்சியான வெற்றிகள் மற்றும் டைமிங் ஆகியவை பல்வேறு கள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+