ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்வதில் பிரச்சனை.. அமெரிக்காவில் முன்னணி வங்கிகளில் முடங்கிய சேவைகள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் திடீரென்று ஆன்லைன் வங்கி சேவைகள் முடங்கி உள்ளன. திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாடிக்கையாளர்களால் ஆன்லைனில் பணப்பரிமாற்றம் உள்பட பிற வங்கி சேவைகளை பெற முடியாமல் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி அமெரிக்காவில் முக்கிய வங்கிகளாக இருக்கும் பேங்க் ஆஃப் அமெரிக்கா, சேஸ், ஜேபி மார்கன், யுஎஸ் வங்கி, வெல்ஸ் ஃபார்கோ, செல் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதனை Downdetector இணையதளம் உறுதி செய்துள்ளது. அதில் அமெரிக்காவின் பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய முடியவில்லை. இன்னும் சிலரால் வங்கி கணக்குகளை அணுக முடியவில்லை என பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி சேஸ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வங்கியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ''தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கான நேரம் வழக்கமானதை விட கூடுதலாக கொஞ்சம் நேரம் எடுக்கிறது. ஆனாலும் வாடிக்கையாளர்களால் தொடர்ந்து வங்கி கணக்குகளை அணுக முடிகிறது. பணப்பரிமாற்றம் செய்ய முடிகிறது'' என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய பிரச்சனையை தீர்க்க வங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
