அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் ஒரு லட்சமாக உயர்வு.. அதிக பாதிப்புள்ள முதல் நாடானது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

Recommended Video

    கொரோனா பூமியான அமெரிக்கா..தற்போது இப்படித்தான் இருக்கிறது

    கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்துள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 27,324 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக அமெரிக்கா உள்ளது.

    US becomes first country to report 1 lakh confirmed coronavirus

    அமெரிக்காவில் ஒரே நாளில் 18294 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,03,729 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதல் நாடாக திகழ்கிறது.

    கொரோனாவால் 1,545 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை தொற்றும் இடமாக நியூயார்க் நகரம் மாறியுள்ளது. அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் அதிகபடியான சுவாசக் கருவிகளை தயார் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாறிய ராணுவ கப்பல் வரவழைக்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலியாகிவிட்டனர். இதனால் இத்தாலியில் பலி எண்ணிக்கை 9,134 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆயிரமாக உள்ளது. ஸ்பெயின் நாட்டில் நேற்று ஒரே நாளில் 769 பேர் பலியாகிவிட்டனர். மொத்த எண்ணிக்கை 4,858 ஆக ஆகியுள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,95,800 ஆக உயர்ந்துள்ளது. இங்கு 9000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே ஸ்பெயினில்தான் சுகாதாரப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரே நாளில் 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+