"சாதிய பாகுபாடு.." தடை செய்ய சட்டம் கொண்டு வந்த கலிபோர்னியா! கறுப்பு நாள் என பாய்ந்த இந்து குழு! ஏன்
வாஷிங்டன்: சாதிய பாகுபாடுகளைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ள நிலையில், இதற்கு அங்குள்ள இந்து அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், இன்னும் இந்தியாவில் இந்த சாதிய பாகுபாடுகள் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. கோயில்களில் குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்க மறுப்பது எனக் குறிப்பிட்ட காலத்திலேயே இதற்கு நாம் உதாரணங்களைப் பார்க்கலாம்.

இந்த சாதிய பாகுபாடு என்பது இப்போது இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. அதாவது எங்கே இந்தியர்கள் அதிகம் சென்று செட்டிலாகி வருகிறார்களோ... அங்கெல்லாம் சாதிய பாகுபாடும் கூட சென்று பிரச்சினையாக மாறுகிறது.
சாதிய பாகுபாடு: அப்படி இந்தியர்கள் அதிகம் சென்று செட்டிலான நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அங்கே இந்த சாதிய பாகுபாடும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. இந்தச் சூழலில் தான் சாதிய பாகுபாட்டைத் தடை செய்யும் விதமாக அங்கே சில மாதங்களுக்கு முன்பு SB 403 என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மீது விவாதங்கள் நடந்த நிலையில், இந்த மசோதா இப்போது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இதன் மூலம் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராகச் சட்டம் கொண்டு வந்த முதல் அமெரிக்க மாகாணம் என்ற சிறப்பை கலிபோர்னியா பெற்றுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரைப் பாகுபாடு காட்டுவதை இந்த சட்டம் தடை செய்கிறது. சாதி அடிப்படையில் ஒருவரிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது. இது இப்போது கலிபோர்னியா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
நிறுவனங்களில் சாதிய பாகுபாடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சட்டம் அதைத் தடுக்க உதவும் என்று இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் கலிபோர்னியா எம்பி ஆயிஷா வஹாப் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "சாதி அடிப்படையில் ஒருவரிடம் பாகுபாடு காட்டப்படுவது இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். இந்தச் சட்டம் வரலாற்று ரீதியில் முக்கியமானதாக இருக்கும்" என்றார்.
இந்து அமைப்பு எதிர்ப்பு: இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் அங்குள்ள சில இந்து அமைப்புகள் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்கிறார்கள்.. இது குறித்து இந்து அமெரிக்கன் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் சுஹாக் சுக்லா கூறுகையில், "இது ஒரு கருப்பு நாள்.. கலிபோர்னியா தனது இனவெறி காலத்தை மீண்டும் கொண்டு வரப் பார்க்கிறது. தெற்காசிய மற்றும் இந்துக்களைக் குறிவைத்து இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக இந்து விரோத குழுக்கள் பக்கம் சாய்ந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது சமூகத்தைக் குறிவைக்கும் நோக்கத்துடன் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது இனவெறி மட்டுமில்லை.. அது அரசியலமைப்பிற்கு எதிரானது. கலிபோர்னியாவில் வசிக்கும் இந்துக்களின் உரிமையைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.. இந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும்.. வாக்களிக்காமல் இருந்தோருக்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் என்ன நிலைமை: கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த காலங்களிலும் சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டப்படும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அங்குள்ள பெரும் நிறுவனங்களும் கூட இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020இல் சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் வகையில் தனது ஊழியர்களுக்கு வகுப்புகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications