காலிஸ்தானியை கொல்ல சதி.. Ex இந்திய உளவாளி மீது அமெரிக்காவில் வழக்கு.. என்ன நடந்தது! பகீர் பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக இந்திய உளவு படையான ரா பிரிவில் வேலை செய்த முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்காவில் இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் விகாஷ் மீது கொலை மற்றும் பணமோசடி வழக்குகளை அமெரிக்க நீதித்துறை சுமத்தியுள்ளது.

நமது நாட்டின் ஒரு பகுதியாக உள்ள பஞ்சாபைத் தனியாக காலிஸ்தான் நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் சிலர் கூறி வருகிறார்கள். நமது நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

us world khalistan

குர்பத்வந்த் சிங்: அதேநேரம் பல வெளிநாடுகளில் இந்த பிரிவினை அமைப்புகளுக்குத் தடை இல்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் பிரிவினைவாத இயக்கங்கள் வெளிப்படையாக இயங்கி வருகின்றன. அதில் சில பிரிவினைவாதிகள் வெளிநாடுகளில் இருந்தபடியே இந்தியாவில் சதி மற்றும் வன்முறை செயல்களில் கூட ஈடுபடுகிறார்கள். அப்படி கனடாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி தான் குர்பத்வந்த் சிங் பன்னு. கனடா மற்றும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அவர், அங்கிருந்தபடியே இந்தியாவில் வன்முறைகளைத் திட்டமிட்டுள்ளதாகப் புகார்கள் உள்ளன.

இந்தச் சூழலில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க மண்ணில் இருந்த குர்பத்வந்த் சிங்கை கொல்ல இந்திய உயர் அதிகாரி ஒருவர் சதி செய்ததாகவும் அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் அந்நாட்டு அரசு கூறியது. இந்த விவகாரத்தில் தான் இந்திய உளவுப்படையான ரா பிரிவில் வேலை செய்த முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா: இது தொடர்பாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் பி கார்லண்ட் கூறுகையில், "அமெரிக்கர்களைக் குறிவைத்து ஏதாவது சம்பவம் நடத்தப்பட்டால் அமெரிக்க நீதித்துறை அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்பதற்கு இந்த வழக்கு எடுத்துக்காட்டு" என்றார். கடந்த 2023 மே மாதம், அப்போது இந்திய அரசின் ரா பிரிவில் பணியாற்றிய விகாஷ் யாதவ் குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்ல சதி செய்ததாகக் கூறப்பட்டது. விகாஷ் யாதவ் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிலருடன் இணைந்து பன்னுவை கொல்ல முயன்றார் என்பதே புகாராகும்.

என்ன நடந்தது: இந்த விவகாரத்தில் விகாஷ் யாதவ் இந்திய நாட்டவரான நிகில் குப்தா என்பவருடன் இணைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்திய நாட்டவரான நிகில் குப்தா கடந்த ஜூன் மாதம் ப்ராக் நகரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அரசிடம் நிகில் குப்தா ஒப்படைக்கப்பட்டார். நிகில் குப்தா மீது வழக்கு விசாரணை நடந்த போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய இருவரும் அமெரிக்காவில் உள்ள கொலையாளி ஒருவரைத் தொடர்பு கொண்டு ஒரு லட்சம் டாலர் தருவதாக டீல் பேசியுள்ளனர். இதற்கு முன்பணமாக 15 ஆயிரம் டாலரையும் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்பு கொண்ட உளவாளியே அந்நாட்டின் உளவு படையான எஃப்.பி.ஐ இன்ஃபார்மர் தான். அந்த நபர் தந்த தகவலின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து மறுத்தே வருகிறது. குறிப்பிட்ட அந்த நபர் (விகாஷ் யாதவ்) இந்திய அரசின் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவருக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+