ஹெச் 1-பி விசா! அமெரிக்க நிறுவனங்களின் "பிளான் பி!" இனி இந்தியர்களுக்கு பிரச்னையே இருக்காது! எப்படி
வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது ஹெச் 1 விசா குறித்து மிகப் பெரிய விவாதமே நடந்து வருகிறது. ஹெச் 1 பி விசா திட்டத்திற்கு டிரம்ப் எதாவது தடை விதித்தால் இதனால் ஏற்படும் பாதிப்பு மிக மோசமாகவே இருக்கும். இதற்கிடையே அரசியல் ரீதியாக எந்தவொரு முடிவு எடுக்கப்பட்டாலும் கூட அதில் இருந்து தப்பிக்க அங்குள்ள நிறுவனங்கள் இப்போது பிளான் பி-ஐ கையில் எடுத்துள்ளன.
இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்ல ஹெச் 1 பி விசா முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும், இந்த ஹெச் 1 பி விசாவால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

ஹெச் 1 பி விசா:
அதாவது அமெரிக்கர்களை வேலைக்கு எடுத்தால் அதிக சம்பளம் தர வேண்டும் என்பதற்காக ஹெச் 1 பி விசா மூலம் பெருநிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு எடுத்து வருவதாக டிரம்பின் குடியரசு கட்சியினர் விமர்சிக்கிறார்கள். இதனால் ஹெச் 1 பி விசா திட்டத்தையே முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்களும் சமீப காலமாக அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
வரும் ஜனவரி 20ம் தேதி அமெகிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் சூழலில், இந்த விவகாரத்தில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. அதேநேரம் அங்கு அனைவரும் ஹெச் 1 பி விசாவுக்கு எதிராக இல்லை. எலான் மஸ்க் தொடங்கி பலரும் ஹெச் 1 பி விசா மூலமாகவே திறமையான ஆட்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர முடிவதாகத் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
லாட்டரி போல:
இது தொடர்பாகச் சட்ட நிறுவனமான டிக்கின்சன் ரைட்டில் பணிபுரியும் கேத்லீன் கேம்ப்பெல் வாக்கர் கூறுகையில், "கம்மி சம்பளத்திற்கு ஆட்களை வேலைக்கு எடுத்த ஹெச் 1 பி விசாவை பயன்படுத்துவதாகச் சொல்வது ஏற்கும்படி இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வேறு வழியே இல்லாத போது மட்டுமே இங்குள்ள நிறுவனங்கள் H-1B விசா முறைக்குச் செல்கின்றன. ஏனெனில் ஹெச் 1 பி விசா காஸ்ட்லியானது. கிட்டதட்ட லாட்டரி போல என்று கூடச் சொல்லலாம். இதனால் அது யாருக்கும் இங்கே முதல் ஆப்ஷனாக இருப்பதில்லை" என்றார்.
உலகின் தலைசிறந்த பணியாளர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க ஹெச் 1 பி விசா திட்டம் பயன்படுகிறது. இருப்பினும், இதற்கான கட்டணம் அதிகம்,. மேலும், விண்ணப்பிக்கும் பிராசஸும் சிக்கலானது. ஆண்டுக்கு 85,000 பேருக்கு மட்டுமே ஹெச் 1 பி விசா திட்டத்தில் விசா கிடைக்கும். அதுவும் கூட லாட்டரி முறையிலேயே கிடைக்கும். எனவே, யாருக்கு ஹெச் 1 பி விசா கிடைக்கும் என்பதே முன்கூட்டியே சொல்லவே முடியாது.
ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்:
மேலும், ஒரு ஆண்டுக்கு சுமார் 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹெச் 1 பி விசா வழங்கப்படும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இதற்குப் பல லட்சம் விண்ணப்பங்கள் வரும். கொரோனா முடிவுக்கு வந்த 2022ம் ஆண்டு 4.1 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்த சூழலில், 2023ல் அது 7.50 லட்சமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பெரு நிறுவனங்கள் கட்ட வேண்டிய விண்ணப்பக் கட்டணங்களும் ரொம்பவே அதிகம்.
நிலைமை இப்படி இருந்தாலும் கூட குடியரசு கட்சியினர் இது அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதைத் தடுப்பதாகவும் இதனால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். புதிதாக அதிபராகப் பதவியேற்கும் டிரம்ப், எப்போது என்ன செய்வார் என்றே தெரியாது. ஒருவேளை அவர் ஹெச் 1 பி விசா திட்டத்தில் கைவைத்தால் அது சிக்கலாகவே மாறும்.
பிளான் B-ஐ கையில் எடுத்த நிறுவனங்கள்
இதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட அமெரிக்க நிறுவனங்கள் இப்போது வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் ரிமோட் முறையில் வேலைக்கு ஆள் எடுப்பதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 63% நிறுவனங்கள் இதுபோல ரிமோட் வேலை செய்யும் முறையில் ஆட்களை எடுக்க அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதிலும் சுமார் 71% நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஆட்களை எடுக்கத் தயாராக உள்ளது மற்றொரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இப்படி ரிமோட் முறையில் வேலைக்கு எடுப்போர் நேரடியாக ஆபீஸ் வரும் தேவை இருக்காது. இதனால் ஹெச் 1 பி விசாவுக்கு தடையே விதிக்கப்பட்டாலும் கூட எந்தவொரு சிக்கலும் வராது. ஹெச் 1 பி விசாவை சுற்றி விவாதம் அதிகரித்துள்ள சூழலில், பாதுகாப்பாக இருக்கவே பெரு நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications