டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் சந்திக்கும் முன் உலகை அதிர வைத்த அமெரிக்கா! அணு ஆயுத ஏவுகணை சோதனை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சீனாவின் ஷென்சென் நகரில் சந்தித்து பேச உள்ளனர். உலகமே இந்த சந்திப்பை உற்று நோக்கி வரும் நிலையில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட மினிட்மேன்-3 ஏவுகணையை அமெரிக்கா சோதித்து பார்த்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடக்கும் முன்பாக கண்டம் விட்டு காண்டம் பாயும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நாளை சந்தித்து பேச உள்ளனர். சீனாவில் உள்ள ஷென்சன் நகரத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடி சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

US Conducts nuclear Capable missile test ahead of meetings between Trump Putin Xi Jinping

அமெரிக்கா அணு ஆயுத சோதனை

சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு இடையே மூன்று தலைவர்களும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகமே இந்த சந்திப்பை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், அமெரிக்கா இன்று திடீரென அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள வேண்டன்பெர்க் விண்வெளி தளத்திலிருந்து இந்த ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது அமெரிக்கா. 'மினுட்மேன் III' என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டதாகும். அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனையை திடீரென திட்டமிடவில்லை என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று என்று அமெரிக்க கமாண்டண்ட்ட் தெரிவித்துள்ளது.

டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் சந்திப்பு

அதுமட்டுமின்றி உலக நாடுகளில் தற்போது நிலவும் எந்தவொரு நிகழ்வுக்கும் அல்லது சர்வதேச சூழலுக்கும் எதிர்வினையாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளை உலகமே உற்று நோக்கும் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், அமெரிக்கா நடத்தியுள்ள சோதனை சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் ஆகிய 3 தலைவர்கள் சந்தித்து பேசும் போது, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மற்றும் அணு ஆயுத பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உலகின் அணு ஆயுதங்களில் சுமார் 90 சதவீதத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் கொண்டுள்ளன. சீனாவும் தனது அணு ஆயுத திறனை தொடர்ந்து அதிகரிக்க தீவிரம் காட்டி வருகிறது.

சீனாவிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள்

சீனாவிடம் 600 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால், 2030 ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் அணு ஆயுதங்களுக்கு மேல் சீனா தயாரித்துவிடும் என்று பெண்டகன் மதிப்பிட்டுள்ளது. வழக்கமான போர் தளவடாங்களை ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில் அணு ஆயுத பலத்தையும் பெருக்க சீனா தீவிரம் காட்டி வருகிறது.

இத்தகைய சூழலில், நாளை நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. சர்வதேச அளவிலான போர் பதற்றம், மேற்காசிய போர், உக்ரைன் போர் ஆகியவற்றிற்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+