அமெரிக்காவில் தீபாவளிக்கு பொது விடுமுறை... நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்..!
வாஷிங்டன்: தீபாவளி பண்டிகை அன்று அமெரிக்காவில் பொதுவிடுமுறை அளிப்பது குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் எதிர்ப்பின்றி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அமெரிக்காவிலும் இனி தீபாவளி அன்று பொது விடுமுறை அமலுக்கு வரும்.
அமெரிக்க காங்கிரஸ் எம்.பியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்த மசோதாவை முன் மொழிந்துள்ளார். தீபாவளி பண்டிகையின் வரலாறு, முக்கியத்துவம், சமயக் கலாச்சாரம் உள்ளிட்டவைகள் குறித்தெல்லாம் அந்த மசோதாவில் விரிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீபாவளியின் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் அங்கீகரிப்பதற்கான இந்த மசோதாவை முன்மொழிவதிலும், அறிமுகப்படுத்துவதிலும் தாம் மகிழ்ச்சி கொள்வதாக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் பெண் எம்.பி., கரோலின் மலோனி என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அமெரிக்காவில் வாழும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் நலனையும், மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டு இந்த மசோதாவை தாக்கல் செய்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் தீபாவளி குறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் இந்தியர்கள் தங்கள் பக்கத்து வீட்டினரையும், நண்பர்களையும் வீடுகளுக்கு அழைத்து தீபாவளி இனிப்புகளை பரிமாறி பண்டிகையின் வரலாற்றை விவரிக்கின்றனர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாவாளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் உள்ளதாலும், இந்தியர்கள் மீது தனி அன்பு கொண்டுள்ள ஜோ பிடன் அதிபராக உள்ளதாலும் இந்த மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications