இனி யூஎஸ் ரிட்டர்ன் இல்லை.. ரிட்டர்ன்டு பை யூஎஸ்! மேலும் 480 இந்தியர்களை வெளியேற்றும் ட்ரம்ப்! ஷாக்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியர்கள் பலர் ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். தேர்தலுக்கு முன்பாகவே அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்த ட்ரம்புக்கு மக்கள் பெருவாரியாக ஆதரவளித்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவரவர் நாடுகளுக்கே அனுப்பும் நடவடிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்ததாக இந்தியர்கள் பலர் ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அரியானா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தர பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பேர், சண்டிகரைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 104 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை டெக்ஸாஸிலிருந்து ஸ்ச்- 17 ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். நேற்று முன் தினம் மதியம் பஞ்சாபின் அமிர்தசரஸில் அந்த விமானம் தரையிறங்கியது.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் கைகள் கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு கைதிகள் போல விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பதில் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 12ஆம் தேதி பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அன்றைய தினம் அமெரிக்கா செல்கிறார். அங்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பையும் சந்திக்கிறார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றி இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்க பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா மீதான பொருளாதார நெருக்கடி, இந்தியர்களை வெளியேற்றுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே," கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட போது அப்போதைய மத்திய அரசு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கை கால்களில் விலங்கு போட்டு அனுப்பப்பட்ட விவகாரத்தில் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. தற்போது 100 பேர் இந்தியா திரும்பி இருக்கும் நிலையில் மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது. மொத்தமாக எத்தனை பேர் என தற்போதைக்கு கணிக்க முடியாது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருந்தாலும் தற்போது அமெரிக்காவின் நடவடிக்கைகள் வேறு விதமாக இருக்கிறது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தங்கள் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்கா விளக்கம் அளித்து இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications