நம்மகிட்டயே ஒரு ராகு காலம் வம்பிழுத்துட்டு இருக்கு! இந்தியர்களை மிரட்டும் ட்ரம்ப்.. வீடியோவை பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற அதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களை கை கால்களில் சங்கிலியால் பூட்டி வெளியேற்றும் வீடியோவை வெளியிட்டு வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
அதிபர் தேர்தல் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவரவர் நாடுகளுக்கே அனுப்பும் நடவடிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்ததாக இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் ராணுவ விமானத்தில் அவரவர் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஹரியானா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தர பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பேர், சண்டிகரைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 104 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை டெக்ஸாஸிலிருந்து ஸ்ச்- 17 ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 4ஆம் தேதி அந்த விமானம் இந்தியாவில் தரையிறங்கியது.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் கைகள் கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு கைதிகள் போல விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும், மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது.
மேலும், இந்த வாரம் மற்றொரு விமானத்தில் இந்தியர்கள் அனுப்பப்பட்டனர். இதேபோல் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அவரவர் நாடுகளுக்கு ராணுவ விமானம் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியர்களுக்கு எதிராக இருப்பதாகவே குற்றம் சாட்டப்படுகிறது. டிரம்ப் பதவியேற்ற உடன் பிறப்புசார் குடியுரிமையை ரத்து செய்ததோடு சட்டவிரோதமாகத் தங்கி உள்ளவர்களையும் வெளியேற்ற கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ASMR: Illegal Alien Deportation Flight 🔊 pic.twitter.com/O6L1iYt9b4
— The White House (@WhiteHouse) February 18, 2025
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டோரை விலங்கு பூட்டி அழைத்துச் செல்லும் வீடியோவை வெளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் மனிதாபிமானம் அற்ற முறையில் நாடு கடத்தப்பட்டதை பிரதமர் மோடி வேடிக்கை பார்த்ததாக இந்திய எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கை கால்களில் விலங்கு பூட்டி, வரிசையாக நடக்க வைத்து, அவர்களை விமானத்தில் ஏற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதுவரை அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களுக்கும், இனி வரலாம் என நினைப்பவர்களுக்கும் எச்சரிக்கையை விடுக்கும் வகையிலேயே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகின்ற சர்வதேச அரசியல் நிபுணர்கள். ஏற்கனவே வர்த்தகப் போர், வரி உயர்வு என டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அதிரடி காட்டி வரும் நிலையில் தற்போது இந்த வீடியோ மேலும் இந்தியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications