வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன முஸ்லீம்கள் பத்தி இப்படி கவலைப்பட்டிருக்கீங்களா.. அமெரிக்கா கேள்வி .. வாயடைத்து போன இம்ரான்கான்

Google Oneindia Tamil News

Recommended Video

    சீன முஸ்லிம்களுக்கு கவலைப்பட்டிருக்கீங்களா?.. அமெரிக்காவின் கேள்வியால் மிரண்டு போன இம்ரான்-வீடியோ

    வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீர் குறித்து பேசும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனாவில் உள்ள முஸ்லீம்களின் நிலை குறித்து இதுவரை இது கவலைப்பட்டது உண்டா என்று அமெரிக்கா கடிந்து கொண்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியான மற்றும் தொழில் ரீதியான உறவுகளை முறித்துக்கொண்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீரில் முஸ்லீம்கள் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்.

    கேரளா இடைத்தேர்தல்: பால சட்டசபை தொகுதியை 54 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றிய இடதுசாரிகள்கேரளா இடைத்தேர்தல்: பால சட்டசபை தொகுதியை 54 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றிய இடதுசாரிகள்

    போர் மூளலாம்

    போர் மூளலாம்

    அமெரிக்கா, உள்ளிட்ட உலக நாடுகள் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும், காஷ்மீரில் முஸ்லீம்கள் நிலை மோசமாக இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டி வருகிறார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    அமெரிக்க தூதர்

    அமெரிக்க தூதர்

    இந்த சூழலிலில் நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க பெண் தூதர் அலைசி வெல்ஸ் முஸ்லீம்கள் விவகாரம் தொடர்பாக தாருமாறாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    கானின் கருத்து பயனில்லை

    கானின் கருத்து பயனில்லை

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கருத்துக்கள் எந்த பயனும் இல்லாதது. இரு நாடுகளும் அணு ஆயுதம் வைத்துள்ளன, இந்த நாடுகள் வாய்ச்சண்டையை குறைத்துக்கொள்வது நல்லது.

    இம்ரான் கானுக்கு கேள்வி

    இம்ரான் கானுக்கு கேள்வி

    இம்ரான் கான் ஏன் சீனாவை பற்றி வாய் திறப்பதில்லை, சீனா பத்து லட்சம் உய்குர் முஸ்லீம்களை தடுத்து வைத்துள்ளது. மேற்கு சீனாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முஸ்லீம்கள் பற்றியும் அவர்களின் மனித உரிமைகள் பற்றியும் காஷ்மீரை போல் பரந்த அக்கறையை இம்ரான்கான் காட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். சீனாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் கொடூரங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கான வேலைகளை ஐக்கிய நாடுகள் சபை நிர்வாகம் மேற்கொண்டு வருவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்" என்றார்.

    சீனாதான் கூட்டாளி

    சீனாதான் கூட்டாளி

    பாகிஸ்தானின் முக்கியமான கூட்டாளியாகவும் பொருளாதார பங்காளியாகவும் சீனா திகழ்கிறது. இந்த சூழலில் இம்ரான் கானிடம் சீனாவில் உள்ள உய்குர் முஸ்லீம்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். பாகிஸ்தான் உடன் சிறப்பு உறவினை சீனா கொண்டுள்ளது. தனிப்பட்ட முறையில் மட்டுமே பிரச்சனைகளை எழுப்பியது என்றார்.

    சீனா மீது புகார்

    சீனா மீது புகார்

    இஸ்லாமிய மரபுகளை வலுக்கட்டாயமாக நிறுத்தி, உய்குர்களை பெரும்பான்மையான ஹான் மக்களுடன் ஒருங்கிணைக்க சீனா முயற்சித்து வருவதாக உரிமைக் குழுக்கள கூறுகின்றன. ஆனால் சீனாவோ, அவர்கள் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறது.

    English summary
    US diplomat Alice Wells questioned why Mr Khan was not also speaking out about China, which has detained an estimated one million Uighurs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X