"கிரீன் கார்டு!" பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முன் வந்த மாஸ் அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்
வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்லும் நிலையில், கிரீன் கார்டு தொடர்பாக அமெரிக்கா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் அதிகப்படியாகச் சென்று செட்டிலாகி வருகின்றனர். குறிப்பாக ஐடி துறையில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால் அவர்களின் தேவையும் வெளிநாடுகளில் அதிகமாகவே இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் இருந்து அதிக பேர் அமெரிக்காவுக்குச் சென்று வருகின்றனர். அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு அங்கே கிரீன் கார்டு வாங்குவதே லட்சியமாக இருக்கும். இதற்கிடையே இது குறித்து பைடன் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி: அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தில் ஒரு பகுதியாக வரும் ஜூன் 22ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தில் அவர் பல முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில் அங்கே கிரீன் கார்டுகளுக்கு அப்ளை செய்வது தொடர்பான விதிமுறைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இது அங்கே கிரீன கார்டுக்கு அப்ளை செய்யும் இந்தியர்களுக்குப் பெரியளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் முக்கியம்: கிரீன் கார்டை நாம் நிரந்தர குடியுரிமை அட்டை எனப் புரிந்து கொள்ளலாம். அதாவது வெளிநாடுகளில் இருந்து வருவோர் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கலாம் என்பதையே இந்த கிரீன் கார்டு குறிக்கிறது. அமெரிக்க குடிவரவு சட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.40 லட்சம் பேருக்கு கிரீன் கார்டுகளை வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கிரீன் கார்டுகளில் அதிகபட்சம் 7% மட்டுமே குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும். அதாவது 100 கார்டுகளை வழங்குகிறார்கள் என்றால் ஒரே நாட்டை சேர்ந்த 7 பேருக்கு மட்டுமே கிடைக்கும்.

என்ன செய்ய வேண்டும்: அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய ஒரு சமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விதியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். எடுத்தவுடன் ஒருவரால் கிரீன் கார்டிற்கு நேரடியாக அப்ளை செய்ய முடியாது. இந்த விண்ணப்பத்திற்கு அப்ளை செய்யவும் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அந்த அனைத்து நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே கிரீன் கார்டிற்கு அப்ளை செய்ய முடியும்.
அதாவது இதற்கு விண்ணப்பிக்கும் நபர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் வந்திருக்க வேண்டும். அவர்களிடம் உரிய non-immigrant status இருக்க வேண்டும். அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த ஒருவரின் விண்ணப்பம் எடுத்துக் கொள்ளப்படும். அவர்களின் குற்றப் பின்னணி குறித்தும் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள். கிரீன் கார்டிற்கு அங்கே ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்.
யாருக்கு அதிக பயன்: இதற்கிடையே இந்த கிரீன் கார்டு அப்ளை செய்யும் நடைமுறையில் தான் அமெரிக்க அரசு இப்போது தளர்வுகளை அறிவித்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உதவும். குறிப்பாக ஏற்கனவே அமெரிக்காவில் பல ஆயிரம் இந்தியர்கள் கிரீன் கார்டிற்கு அப்ளை செய்துவிட்டுக் காத்திருக்கும் நிலையில், இந்த தளர்வுகள் குறித்த அறிவிப்பு அவர்களுக்கே மிகப் பெரியளவில் உதவும் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications