இந்த 'ஆறு' எப்போதும் வரலாம்.. முடிவுக்கு வரும் இழுபறி.. வெற்றியின் விளிம்பில் ஜோ பிடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப்போவது ஜோ பிடன் என்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் வெற்றி பெற தேவையான ஆறு வாக்குகளை அவர் எந்த நேரத்திலும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியுரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்தது. தேர்தலுக்கு முன்பு தபால் வாக்குகள் அதிக அளவில் போடப்பட்டது. இதுவரை 100 ஆண்டுகளி இல்லாத அளவிற்கு வாக்குகள் பதிவாகிஇருந்தது.

பிடன் டிரம்ப் மோதல்
இந்த தேர்தலில் ஆரம்பத்தில் சில முக்கிய மாநிலங்களில் முன்னிலையில் இருந்த டிரம்ப், அதன்பிறகு பின்னடைவை சந்தித்தார். கடந்த நான்கு நாட்களாக வாக்குகளை எண்ணிக்கையில் டிரம்ப் மற்றும் பிடன் இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது.

எவ்வளவு வாக்குகள்
இந்த இழுபறி விரைவில் முடிவுக்கு பரப்போகிறது,. ஜார்ஜியா அல்லது பென்சில்வேனியால் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறவிக்கப்பட்டால் அவர் அமெரிக்காவின் 46வது அதிராவது உறுதியாகிவிடும். தற்போதைய நிலையில் 264 இடங்களை பிடனும், 214 இடஙகளை டிரம்பும் பெற்றுள்ளனர். ஜோ பிடன் 50.23 சதவத வாக்குகளையும், டிரம்ப் 47.83 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஜார்ஜியாவில் முன்னிலை
தற்போதைய நிலையில் பென்சில்வேனியா, ஜார்ஜியா ஆகிய இரு மாகாணங்களில் ஒரு மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவித்தாலும் அவர் அமெரிக்க அதிபர் ஆவது உறுதியாகிவிடும். அதாவது ஜோ பிடன் வெற்றி பெற இப்போது வெறும் ஆறு வாக்குகள் மட்டுமே தேவை.

எளிதாக பிடன் வெல்வார்
பென்சில்வேனியாவில் 20 வாக்குகளும், ஜார்ஜியாவில் 16 வாக்குகளும் உள்ளது. நெவடாவில் 6 வாக்குகள் உள்ளன. இந்த மூன்றிலும் முன்னணியில் இருப்பது பிடன் தான். டிரம்ப் வடக்கு கரோலினாவில் மட்டும் முன்னிலையில் இருக்கிறார். வாக்கு எண்ணிக்கையில் நூலிழை வித்தியாசம் இருந்தாலும் ஜோ பிடனே மொத்தமாக முன்னிலையில் இருக்கிறார். சில ஆயிரம் வாக்குள் மட்டுமே எண்ண வேண்டிய உள்ளது. எனவே பிடன் வெல்லப்போவது உறுதியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னர் தெரிந்துவிடும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications