விலகிய நிக்கி ஹேலே.. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு ‛ஷாக்’.. இனி ஜோ பைடன் VS டிரம்ப் தான்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே இன்று விலகினார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப் இடையே நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளது. இத்தகைய சூழலில் தான் நிக்கி ஹேலேவின் விலகல் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகளாகும். இதனால் அங்கு அதிபர் தேர்தல் என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டில் இறுதியில் நடந்தது. அந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

US Elections 2024 is Joe Biden VS Donald Trump only after Nikki Haley exits the race

ஜோ பைடன் அப்போதைய அதிபரான குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பை வீழ்த்தி அதிபரானார். 2021 முதல் ஜோ பைடன் அதிபராக செயல்பட்டு வருகிறார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக செயல்பட்டு வருகிறார். இதில் கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.

நவம்பரில் தேர்தல்: இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட ஜோ பைடன் விரும்புகிறார். அவருக்கு வயது அதிகமாக இருந்தாலும் கூட அவருக்கு போட்டியாக அந்த கட்சியில் அதிபர் தேர்தலில் களமிறங்க தற்போது வரை யாரும் முன்வரவில்லை.

டொனால்ட் டிரம்ப்: அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட மிகவும் ஆர்வமாக உள்ளார். மீதான நீதிமன்ற வழக்குகள் பிரச்சனையாக இருந்தாலும் கூட டிரம்ப் அதை பற்றி கவலைப்படவில்லை. மேலும் கட்சியில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் போட்டியிட ஆர்வமாக உள்ளார். ஆனால் டொனால்ட் டிரம்புக்கு போட்டியாக குடியரசு கட்சி சார்பில் நிறைய பேர் அதிபர் வேட்பாளராக களமிறங்க போட்டியிட்டனர்.

டிரம்புக்கு அதிகரித்த போட்டி: அதில் முதன்மையானவர் கேரளாவை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமி. அதேபோல் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிக்கி ஹேலே உள்பட மேலும் சிலர் இந்த பட்டியலில் இருந்தனர். அமெரிக்க அதிபர் வேட்பாளராக வேண்டும் என்றால் கட்சி சார்பில் நடக்கும் மாகாணம் வாரியாக உள்கட்சி தேர்தல் என்பது நடக்கும். அதில் வெற்றி பெறுவோர் தான் அதிபர் வேட்பாளராக முடியும். அந்த வகையில் ஆரம்பம் முதலே குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்புக்கு தான் ஆதரவு இருந்தது. இதனால் விவேக் ராமசாமி சமீபத்தில் போட்டியில் இருந்து விலகினார்.

பின்னடைவால் விலகல்: இத்தகைய சூழலில் டொனால்ட் டிரம்பை விட செல்வாக்கு குறைவாக இருந்தாலும் கூட நிக்கி ஹேலே தொடர்ந்து களத்தில் இருந்தார். இந்நிலையில் தான் Super tuesday என்ற நாளில் அமெரிக்காவில் பல மாகாணங்களில் உள்கட்சி தேர்தல் நடந்தது. இதில் நிக்கி ஹேலே பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால் அவர் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஷாக் ஏன்? நிக்கி ஹேலே என்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் அஜித் சிங். சீக்கியரான இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவர் பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அஜித் சிங்கின் மனைவியும், நிக்கி ஹேலேவின் தாய் பெயர் ராஜ் கவுர். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்திருந்தார். இவர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நிலையில் நிக்கி ஹேலே அமெரிக்காவிலேயே வளர்ந்தார்.

மேலும் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது நிக்கி ஹேலே ஐநாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றினார். அதோடு டொனால்ட் டிரம்புடன் சேர்ந்து பல காலம் அவர் பணியாற்றினார். தற்போது அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றால் இந்திய வம்சாவளி அதிபர் என்ற பெயர் கிடைத்திருக்கும். ஆனால் அவர் தற்போது போட்டியில் இருந்து விலகி உள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதன்மூலம் வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது ஜோ பைடன் VS டொனால்ட் டிரம்ப் என மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+