அமெரிக்காவில் எத்தனை முறை ஒருவர் அதிபராக முடியும்? விதிகளை மாற்ற காரணமான பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இதில் டிரம்ப் 178 வாக்குகளுடன், கமலா ஹாரிஸ் 99 வாக்குகளுடனும் உள்ளனர். அமெரிக்காவை பொறுத்தவரை ஒருவர் எத்தனை முறை அதிபராக முடியும் தெரியுமா? அங்குள்ள விதிகள் சொல்வது என்ன தெரியுமா? இதை பாருங்கள்.
அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் 2016 முதல் 2020 வரை அதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் அப்போது மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்து குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கினார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவில்லை.. அவருக்கு பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் இறங்கி உள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். 538 தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி, பல்வேறு முக்கிய மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் இதுவரை 178 எலக்ட்ரோல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
கமலா ஹாரிஸ் 99 இடங்களில் வென்றுள்ளார். டெக்சாஸ் 40, ப்ளோரிடா 30 ஆகிய பெரிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க் 28, இலியானாஸ் 19 ஆகிய முக்கிய மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வென்றுள்ளார். டிரம்ப் இன்னும் கிட்டத்தட்ட 92 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். இதில் கலிபோர்னியாவில் (54) பெறும் வெற்றி தான் ஆட்சியை தீர்மானிக்கும் என்பதால் அந்த மாகாணத்தின் முடிவுகளுக்குத்தான் அமெரிக்காவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் எத்தனை முறை அதிபராகி ஒருவர் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் தெரியுமா? ஒருவர் இரண்டு முறை மட்டுமே தேர்தலில் வென்று அதிபராக முடியும். அதிகபட்சம் 10 வருடங்கள் ஒருவர் அமெரிக்காவில் அதிபராக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் ஏற்கனவே 2016 முதல் 2020 வரை அதிபராக இருந்த டிரம்ப் 2020 தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். அதனால் 2024 தேர்தலில் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் விதிகளின் படி ஒருவர் இரண்டு முறை (நான்கு வருட பதவிக் காலங்கள்) பதவி வகிக்கிறார்கள். அதேநேரம் மரணம், ராஜினாமா செய்தல் அல்லது முந்தைய அதிபர் பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களின் படி, பதவி நீட்டிப்பு பெற்று 10 ஆண்டுகள் வரை பதவி வகிக்கலாம். அதாவது அமெரிக்க அரசியலமைப்பின் 22 வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது.
முன்னதாக 1951 இல் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22 வது திருத்தத்திற்கு முன்னர், ஒருவர் அதிபராக எத்தனை முறை வேண்டுமானாலும் பதவி வகிக்க முடியும் என்ற நிலை இருந்தது. கடைசியாக இரண்டு முறைக்கு மேல் பதவி வகித்த ஒரே அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தான். அவர் நான்கு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . 1932 முதல் 1945 வரை அமெரிக்காவின் அதிபராக பணியாற்றினார். இரண்டு முறை பதவி வகித்த பிறகு, அமெரிக்காவின் முதல் அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஓய்வு பெறத் தயாராக இருந்தார் என்று அமெரிக்கா வரலாறுகள் சொல்கின்றன. அதன்பின்னர் இரண்டு பதவிகளுக்குப் பணியாற்றுவது என்பது எழுதப்படாத விதியாக மாறியிருந்தது. அதன்பின்னர் அவர் வழியில் ஆட்சிக்கு வந்தவர்களால் பின்பற்றப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது, ரூஸ்வெல்ட் தொடர்ச்சியாக நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்று, நான்காவது பதவிக்காலத்தில் இறந்தார். அதன்பின்னரே இரண்டு முறைக்கு மேல் யாரும் பதவி விகிக்கக்கூடாது என்ற எண்ணம் அமெரிக்காவில் ஏற்பட்டது.
இந்தியாவை பொறுத்தவரை, பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வகிக்க முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. நமது இந்திய அரசியலமைப்பின்படி, ஒருவர் முதல் இரண்டு முறை பதவி வகித்திருந்தாலும், இந்தியப் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை மீண்டும் தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications