அமெரிக்காவில் வேலை இழக்கப்போகும் இந்தியர்கள்! டிரம்ப் வைத்த பெரிய ஆப்பு.. உஷார் மக்களே!
நியூயார்க்: அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுடன் வசிப்பவர்கள் H-4 விசாவை வைத்திருப்பார்கள். அவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் எனில் EAD எனப்படும் வேலை அங்கீகார ஆவணம் மிக முக்கியம். இந்த ஆவணம் காலாவதி ஆனால், இதற்கு முன்னர் வரை தானியங்கி முறையில் புதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த தானியங்கி முறையை நிறுத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆவது, மாம்பழமோ, பட்டு துணிகளோ கிடையாது. ஆட்கள்தான் அதிக அளவில் செல்கிறார்கள். அமெரிக்காவில் வேலை செய்ய H-1B விசா முக்கியம். அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட முதலாளிக்கு நீங்கள் வேலை செய்ய அதிகாரம் அளிக்கும் ஆவணம்தான் இந்த H-1B விசா.
சரி வேலை செய்ய ஆட்கள் கிடைத்தால் மட்டும் போதுமா? பொங்கல், தீபாவளி என இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு போக தயக்கம் காட்டினால் அங்குள்ள முதலாளிகள் என்ன செய்வார்கள்? எனவேதான், குடும்பத்துடன் வந்து தங்கிக்கோங்க என அமெரிக்க அரசு அழைக்கிறது. வேலை செய்ய வருபவர்களுக்கு H-1B விசாவும் உடன் வரும் இணையருக்கு H-4 விசாவும் வழங்கப்படும். H-4 விசாவை வைத்துக்கொண்டு அமெரிக்காவில் வசிக்கலாம். கல்வி நிலையங்களில் பயிலலாம், ஓட்டுநர் உரிமம் கூட எடுக்கலாம். ஆனால் அமெரிக்காவில் வேலை செய்ய முடியாது. அதற்குதான் வேலை அங்கீகார ஆவணம் (EAD) தேவை.
இதை வைத்து அமெரிக்காவில் வேலை செய்யலாம். வருமானம் ஈட்டலாம். சொந்தமாக தொழில்கூட தொடங்கலாம். ஆனால் இந்த ஆவணம் பொதுவாக 1-2 ஆண்டுகள் வரைதான் செல்லுபடியாகும். விதிவிலக்காக சில துறைகளில் மட்டும் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் இந்த ஆவணங்களை வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமாராக 1 லட்சம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னர் வரை இந்த ஆவணம் காலாவதி ஆகிவிட்டது எனில் தானியங்கி முறையில் ஆவணத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தானியங்கி முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது ஆவணத்தை புதுப்பிக்கும்போது ஸ்கிரீனிங் என்படும் நடைமுறை மேற்கொள்ளப்படும். அதாவது விண்ணப்பித்தவர்களின் குற்றப்பின்னணி சோதிக்கப்படும். விண்ணப்பதாரர் அமெரிக்காவிலோ அல்லது வெளிநாட்டிலோ ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறாரா என்று சோதிக்கப்படும்.
பின்னர் கைரேகை, பயோமெட்ரிக்ஸ் சேகரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர் அமெரிக்காவில் நுழையவும், வேலை செய்யவும் தகுதியானவர்தானா? என்பதும் உறுதி செய்யப்படும். விண்ணப்பதாரர் பயங்கரவாத அமைப்பு மற்றும் தேச விரோத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறாரா? என்றெல்லாம் பின்னணி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். இதற்கு பெயர்தான் ஸ்கிரீனிங். இதில் ஏதேனும் ஒன்றில் பிரச்சனை இருந்தாலும் அந்த விண்ணப்பதாரரின் விண்ணப்பம் புதப்பிக்கப்படாது. மட்டுமல்லாது அவர் தனது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் வேலை ஆபத்தில் இருக்கிறது. இனி வரும் நாட்களில் H-4 விசா வைத்திருப்பவர்களுக்கு வேலை அங்கீகார ஆவணம் (EAD) கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த மாற்றம் அக்.30ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
டிரம்பின் கோல்டு காயின் பிசினஸ்.. அமெரிக்க அதிபர் சட்டத்தை மீறுகிறாரா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்












Click it and Unblock the Notifications