இப்படி ஒரு அப்பாவா.. பச்சிளம் பெண் குழந்தை.. கூகுளில் வேற உட்கார்ந்து தேடி.. ஆடிப்போன அமெரிக்கா!
வாஷிங்டன்: இப்படியும் ஒரு மனுஷன் இருப்பாரா என்று நினைத்து அறுவெறுப்பு அடைய வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த 29 வயது இளைஞன்.
அவர் செய்த காரியத்தை நினைத்து ஆடிப்போயுள்ளது அமெரிக்கா. பென்சில்வேனியா மாகாணத்தின் லோவர் ப்ரோவிடன்ஸ் டவுன்ஷிப்பிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர் ஆஸ்டின் ஸ்டீவன்ஸ்.
இவர் லோக்கல் கால்பந்தாட்ட அணி கோச்சாகவும் இருந்து வருகிறார். இவருக்கு பிறந்து பத்தே மாதங்களான குழந்தையொன்று இருந்தது.

ஆம்புலன்சுக்கு போன்
ஆஸ்டினும் அவர் மனைவியும் இங்கே வசித்து வந்த நிலையில், குழந்தை தாத்தா பாட்டி வீட்டில் இருந்தது. சில நாட்கள் முன்பாகத்தான் குழந்தையை கூட்டி வந்துள்ளார் ஆஸ்டின். இந்த நிலையில், சம்பவத்தன்று, அவசர கால மருத்துவ உதவிக்கான 911 என்ற எண்ணுக்கு போன் போட்டு தனது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதாகவும் காப்பாற்ற வர வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

குழந்தை கொலை
மருத்துவர் குழு அங்கே விரைந்து சென்று பார்த்தபோது குழந்தை இறந்துபோனது தெரியவந்தது. குழந்தைக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அதன் தலையில் அடிபட்டிருப்பதும், பிறப்புறுப்பில் ரொம்பவே காயம் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸ் தங்கள் பாணியில் விசாரித்தபோது, ஆஸ்டின் அந்த பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த அதிர்ச்சி விஷயத்தை ஒப்புக் கொண்டான்.

செல்போனில் சோதனை
ஆஸ்டின் பலாத்காரம் செய்ததும், அந்த குழந்தை அப்படியே மயங்கி சரிந்துவிட்டது. ஆனால் எப்படி இறந்தது என்று தெரியாது என்று வாக்குமூலம் அளித்துள்ளார் ஆஸ்டின். இதையடுத்து ஆஸ்டினின் செல்போனை வாங்கி சோதித்து பார்த்துள்ளது போலீஸ். அப்போது, ஒரு அதிர்ச்சி காத்திருந்தது போலீசுக்கு.

கூகுளில் தேடிய கொலையாளி
"குழந்தை சுவாசிப்பதை நிறுத்தினால்," "குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லை அல்லது துடிக்கவில்லை என்றால்," "என் குழந்தை சுவாசிக்கவில்லை" மற்றும் "குழந்தை இறந்துவிட்டதாக எப்படி அறிந்து கொள்வது" இப்படியெல்லாம் ஆங்கிலத்தில் டைப் செய்து கூகுளில் போட்டு தேடியுள்ளான் அந்த காமுகன். மேலும் சோஷியல் மீடியாவில் 2 பெண்களிடமும், குழந்தை உடல் நிலை குறித்து விவரம் கேட்டுள்ளார். இந்த தகவலை பார்த்து ஆடிப்போய்விட்டது போலீஸ்.

நேரத்தை வீணடித்தார்
ஒருவேளை குழந்தை மயக்கமடைந்ததும் மருத்துவர்களுக்கு கூறியிருந்தால் கூட காப்பாற்ற வாய்ப்பு இருந்திருக்குமாம். ஆனால் 2 மணி நேரத்தை வீண் செய்துவிட்டார் ஆஸ்டின். வெளியே தெரிந்தால் போலீசுக்கு பலாத்கார தகவல் தெரிந்துவிடும் என்பதால் இப்படி கூகுளில் தேடியுள்ளார் ஆஸ்டின். ஸ்டீவன்ஸ் மாண்ட்கோமெரி கவுண்டியில் ஆஜர்படுத்தப்பட்ட ஆஸ்டின் 1 மில்லியன் டாலர் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அடுத்த கட்ட நீதிமன்ற விசாரணை அக் .13ம் தேதி நடக்கிறதாம்.
-
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications