தங்க மார்கெட் அதிர போகுது.. இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்க போகும் மேஜர் முடிவு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தங்கம் விலை கடந்த சில காலமாகவே பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்க பெடரல் வங்கி இன்றிரவு மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்கப் போகிறது. தங்கம் விலை அடுத்து எந்தப் பாதையில் செல்லும் என்பதை இதுவே முடிவு செய்யும். மேலும், இது சர்வதேச பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் உற்றுக் கவனித்து வருகின்றன.

தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக நிதானமாகவே இருந்து வருகிறது. இவ்வாண்டு தொடக்கம் முதல் டி20 போட்டியைப் போல எகிறி அடித்த தங்கம் விலை, கடந்த ஒரு மாதமாகவே டெஸ்ட் போட்டி போல மாறிவிட்டது. இரண்டு நாட்கள் ஏறினால்.. பிறகு மீண்டும் சரிவது என்ற நிலையே தொடர்ந்தது. இதனால் தங்கம் விலை பெரியளவில் ஏறாமல் இருந்தது.

US America gold

அமெரிக்க பெடரல் வங்கி

இதற்குப் பிரதானக் காரணமே அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறித்த முடிவு தான். அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கத்தைப் பொறுத்து அங்குள்ள பெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். இந்தியாவில் எப்படி ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கிறதோ அதுபோல சொல்லலாம். ஆனால், ரிசர்வ் வங்கி முடிவுகள் இந்தியாவுக்குள் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், அமெரிக்கா டாலர் தான் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுவதால் அமெரிக்க பெடரல் வங்கி முடிவுகள் உலகெங்கும் எதிரொலிக்கும்.

கடைசியாக அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் பெடரல் வங்கி கூட்டம் நடந்தது. அப்போது வட்டி குறைக்கப்பட்டாலும் கூட டிசம்பர் மாதம் வட்டி குறைப்பு உறுதியாக இருக்கும் எனச் சொல்ல முடியாது என்பது போல பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்தார். இதனால் டிசம்பரில் வட்டி குறைப்பு இருக்காது என்றே முதலீட்டாளர்கள் நினைத்தனர். நவம்பர் மாதம் முதல் இரு வாரங்கள் தங்கம் விலை சரிய இதுவே பிரதானக் காரணமாக இருந்தது.

முக்கிய காரணங்கள்

அதன் பிறகு அமெரிக்காவில் பணவீக்கம், வேலைவாய்ப்பு குறித்த டேட்டா வெளியானது. அதில் பணவீக்கம் அதிகமாக இருந்தாலும் நிலைமை கையைவிட்டுப் போகவில்லை. வேலைவாய்ப்பும் மோசமாக இருக்கிறது. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி குறைப்பைச் செய்தாக வேண்டிய சூழலில் இருக்கிறது. இதனால் வட்டி குறைப்பிற்கு வாய்ப்பு இருக்கிறது என்றே பலரும் கருதுகிறார்கள். தங்கம் விலை சில நாட்களாகக் கொஞ்சம் அதிகரிக்க இதுவே காரணமாகும்.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கிய வட்டி விகிதங்களைத் தீர்மானிக்கும் இந்த அமெரிக்க பெடரல் கமிட்டி கூட்டம் நேற்று ஆரம்பித்தது. இன்றைய தினம் வட்டி விகிதம் குறித்த முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு, அதாவது இந்தியா நேரப்படி இன்றிரவு 12.30 மணிக்கு வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். அதைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து ஜெரோம் பவல் செய்தியாளர்களை சந்திப்பார்.

தங்கம் விலை

இதில் இரண்டுமே முக்கியமானது. வட்டி குறைப்பு செய்யப்பட்டது என்றால் தங்கம் விலை எகிறும். ஏனென்றால் வட்டி குறைக்கப்பட்டால் டாலர் மதிப்பு குறையும். இதனால் தங்கம் விலை உயரும். அதேநேரம் வட்டி குறைக்கப்படவில்லை என்றால் தங்கம் விலை சற்றே குறையும்.. இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். அதாவது வட்டி குறைப்பு செய்யப்பட்டாலும் அதன் பிறகு ஜெரோம் பவல் பேசும்போது பாசிட்டிவ் கருத்துகளைக் கூற வேண்டும். எதிர்காலத்தில் வட்டி குறைப்பு இருக்காது என்பது போல எதாவது அவர் பேசினால் தங்கம் விலை சரியும். எனவே இரண்டுமே முக்கியம்!

உற்றுக் கவனிக்கும் உலக நாடுகள்

கடந்த அக்டோபரில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை 25 புள்ளிகள் குறைத்து, 3.75%-4.00% ஆக நிர்ணயித்தது. அமெரிக்க வட்டி விகித மாற்றங்கள் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் அமெரிக்க பெடரல் வங்கி எந்த முடிவை எடுக்கப் போகிறது என்பதை உற்றுக் கவனிப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+