சீச்சீ.. திடீர்னு பேண்ட்டை கழட்டிய பெண்..பதறிப்போன பயணிகள்.. வீடியோ வேற வந்துடுச்சு.. ஒரே அக்கப்போரு
வாஷிங்டன்: நடுவானில் நடந்த ஒரு சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்ன நடந்தது?
விமானங்களில் பயணிக்கும்போது, எத்தனையோ சம்பவங்கள் நடப்பதுண்டு.. சில சமயம், நடுவழியிலேயே பயணிகளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உயிர் பிரியும் சோகமும் நடப்பதுண்டு.. சில சமயம், விநோத சம்பவங்களும் நடப்பதுண்டு.. சிலசமயம் எரிச்சலை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடப்பதுண்டு..

பாலியல் சீண்டல்: இப்படித்தான், 2 மாதங்களுக்கு முன்பு, அபுதாபியிலிருந்து தனியார் விமானம் ஒன்று சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்து கொண்டிருந்தது.. அப்போது, திடீரென 30 வயது பெண் ஒருவர் அலறி கத்தினார். பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர், தன்னை தொடக்கூடாத இடங்களில், தொட்டு தொட்டு தொல்லை தருகிறார் என்று ஆவேசமாக கத்தினார்.
அதற்கு அந்த இளைஞர், "நான் நல்லா தூங்கிட்டு இருந்தேனா.. அப்ப ஒருவேளை தூக்கத்தில், தவறுதலாக கை பட்டிருக்கலாம் என்றார்.. ஆனால் அந்த பெண்ணோ இதை மறுத்தார்.
"இல்லை, பொய் சொல்றாரு.. ஃப்ளைட்டில் ஏறினதில் இருந்தே, இப்படித்தான் சீண்டிக்கொண்டேயிருக்கிறார்" என்றார். அதற்குள் சென்னை ஏர்போர்ட் வந்துவிடவும், விமான பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரிடம் விசாரித்தனர். அதற்கு இளைஞர், "இதெல்லாம் ஒரு விஷயமா? இதெல்லாம் ஒரு குற்றமா? பக்கத்து சீட்டில் யார் இருந்தாலும் கைகள் படத்தான் செய்யும்" என்றார்.
மன்னிச்சிடுங்க: அதற்குள் அந்த பெண், ஏர்போர்ட் போலீசில் புகார் தர போனார். இதை பார்த்ததும் இளைஞர் அப்படியே பம்மிவிட்டார். "மேடம், மேடம், தெரியாமல் செய்துட்டேன்.. மன்னிச்சிடுங்க.. ஹவுஸ் கீப்பிங் வேலை செய்றேன் மேடம்.. இப்பதான் லீவு கிடைச்சது.. சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன்.. புகார் தந்தீங்கன்னா, என் வேலையே போய்விடும்" என்று தேம்பி தேம்பி அழுதார். இதைப்பார்த்ததும் அந்த பெண்ணுக்கு மனம் இளகிவிட்டது.. புகார் எதுவும் தராமல் கிளம்பி சென்றுவிட்டார்.
இதோ இப்போது ஒரு பகீர் சம்பவம் அமெரிக்காவின் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது.. புளோரிடாவிலிருந்து பிலடெல்பியாவுக்கு, அந்த விமானம் சென்று கொண்டிருக்கிறது.
அதிர்ச்சி : அப்போது ஒரு பெண் பயணி, நடுவானில் சக பயணியர் முன்பாக பேன்ட் அகற்றி சிறுநீர் கழிக்க முயன்றுள்ளார்.. இதை பார்த்ததும் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. விமானத்திலிருந்த 2 குழந்தைகளும் இதை பார்த்து மிரண்டு போயிருக்கின்றன.
இதே விமானத்தில் பயணம் செய்த, ஜூலி வோஷெல் ஹார்ட்மேன் என்ற பெண்மணி இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளதுடன், தன்னுடைய ஃபேஸ்புக்கிலும் இதுகுறித்து ஷேர் செய்திருக்கிறார்.

மோசமான அனுபவம்: அதில், "ஃபிளைட்டில் எனக்கு மோசமான அனுபவம் கிடைத்தது.. அந்த பெண் பயணியை, அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் உட்கார சொன்னார் விமான பணிப்பெண்.. ஆனால், பெண் பயணியோ அதை கண்டுகொள்ளவேயில்லை.. வேண்டுமென்றே, 2 குழந்தைகளுக்கு முன்னால் தன்னுடைய பேன்ட்டை கீழே இழுத்துவிட்டு, சிறுநீர் கழிக்க போகிறேன் என்று சொல்லியபடியே, அப்படியே நின்றுகொண்டார்.. இதனால் விமான பணிப்பெண், பெண் பயணியிடம் இதை தட்டிக்கேட்டுள்ளார்.
அதற்கு பெண் பயணி, "சீட்டில் உட்கார முடியாது.. விமானத்திலுள்ள எல்லாரையும் கொன்று விடுவேன்" என்று மிரட்டினார். இதை பார்த்த நானும், அந்த பெண் பயணிடம் சென்று, சீட்டில் போய் உட்காருங்களேன் என்றேன்.. ஆனால், என்னையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். " என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
கொடுமையா போச்சு: போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரங்கள் கோர்ட் வரை செல்ல ஆரம்பித்துவிட்ட நிலையில், மீண்டும் மீண்டும் இதுபோன்ற அடாவடி, அட்டகாசங்கள் விமானங்களில் நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications