ஒரே நேரத்தில் 14,000 விமானங்கள் ரத்து.. கதறும் பயணிகள்.. ஒரு மாசம் கூட ஆகல மறுபடியும் அதே சிக்கல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் எதிர்பாராத விதமாகப் பனிப்புயல் தாக்கியதில் ஒரே நேரத்தில் சுமார் 14,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமானச் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்.
உலகிலேயே அதிகப் பயணிகள் விமானச் சேவையைப் பயன்படுத்தும் நாடு என்றால் அது அமெரிக்கா தான். பரப்பளவு ரீதியாக அமெரிக்கா பெரிய நாடு. இருப்பினும், மக்கள் தொகை அவ்வளவு அதிகம் இல்லை. இதனால் அங்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல விமானங்களையே பயன்படுத்துகிறார்கள். விமானச் சேவை அங்கு அந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

சூரியப் புயல்
இதற்கிடையே அமெரிக்காவில் இப்போது திடீரெனச் சூரியப் புயல் தாக்கியுள்ளது. அமெரிக்காவின் பல மாகாணங்களைத் தாக்கிய இந்த பெரும் பனிப்புயல் பல இடங்களில் விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. கடுமையான குளிர் இருப்பதால் சீரமைப்புப் பணிகள் மெதுவாகவே நடந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளை உலுக்கிய இந்தப் புயலால் பல பகுதிகளில் விமானச் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களில் மட்டும் 14,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அங்கு ஒரே நாளில் இத்தனை விமானங்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
விமானங்கள் ரத்து
அங்கு மிகப் பெரிய விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 43% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 35% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓக்லஹோமா சிட்டியின் வில் ரோஜர்ஸ் இண்டர்நேஷனல் விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு என அனைத்துமே சனிக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டன. ஞாயிறு காலை கூட இந்தப் பாதிப்பு தொடர்ந்தது.
அந்நாட்டின் பரபரப்பான ஏர்போர்ட்டான டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில், சனிக்கிழமை 700க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சிகாகோ, அட்லாண்டா, நாஷ்வில், வட கரோலினாவின் சார்லட் போன்ற பிற முக்கிய விமான நிலையங்களிலும் மிக மோசமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டது.
ஒரு மாசம் கூட ஆகல
அதேநேரம் அமெரிக்காவில் இதுபோல மோசமான வானிலையால் விமானச் சேவைகள் பாதிக்கப்படுவது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது திடீரெனப் பனிப்புயல் தாக்கியதில் 4 நாட்களில் 10,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல கடந்தாண்டு ஜனவரி மாதம் தென்கிழக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட சூரியப் புயலில் ஒரே நாளில் 1700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோசமான பாதிப்பு
அமெரிக்காவின் சவுத் ராக்கி மலைத்தொடரிலிருந்து நியூ இங்கிலாந்து வரை பரவியிருந்த இந்தப் புயல் சுமார் 180 மில்லியன் மக்களை அச்சுறுத்தியது. மோசமான பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை மற்றும் உறைபனி மழை ஆகியவை காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள் முடங்கியுள்ளன. அதிகப் பாதிப்பு இருக்கும் டென்னசி, ஜார்ஜியா, வட கரோலினா, மேரிலாந்து, ஆர்கன்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிசிசிப்பி, இந்தியானா மற்றும் மேற்கு வர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களுக்கு அவசர உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
ரூ.1.7 கோடி சம்பளம்.. "ஒரு பைசா கூட வரி கட்ட வேண்டாம்.." பெண் பைலட் பகிர்ந்த ரகசியம்! -
"குற்ற உணர்வு.. நைட் தூங்க முடியல.." ஏர் இந்தியா விபத்து! ஓராண்டிற்கு பிறகும் உயிர் பிழைத்தவர் கதறல் -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications