அமெரிக்காவிற்கு மிரட்டலா? திடீரென பல ஆயிரம் விமானங்கள் முடங்கியது ஏன்? உள்துறை அமைச்சர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து புறப்பட வேண்டிய பல ஆயிரம் விமானங்கள் திடீரென்று மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவில் பல ஆயிரம் பயணிகள் தவித்து வருகின்றனர். மொத்த நாட்டிலேயும் விமான சேவை இன்றி உள்ளதால் என்ன செய்வது? என்பது தெரியாமல் பயணிகள் கதறி வரும் நிலையில் விமான சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்காவிற்கு வந்த மிரட்டல் தான் காரணமா? என்பது பற்றி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து உள்நாட்டின் பிற இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் விமானங்கள் திடீரென்று நிறுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து எந்த விமானங்களும் செல்லக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

us flight

இதனால் மொத்த விமானங்களும் விமான நிலையங்கள், ஓடுபாதைகளில் நிறுத்தப்பட்டன. இதனால் பல ஆயிரம் விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. பயணிகள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

அமெரிக்காவில் இப்படி திடீரென்று மொத்தமாக விமான சேவைகள் நிறுத்தப்படுவது இது முதல் முறையல்ல.
அமெரிக்க வரலாற்றில் இது 3வது முறையாகும். முதல் முறையாக கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி விமான சேவைகள் மொத்தமாக நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் அல்குவைதா பயங்கரவாதிகள் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவைகள் மொத்தமாக நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் விமான போக்குவரத்து துறையான பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் ஏற்பட்ட கோளாறால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் தற்போது விமான சேவைகள் முடங்கி உள்ளது. இதனால் இந்த விமான சேவை நிறுத்தன் பின்னணியில் மிரட்டல் ஏதேனும் உள்ளதா? என்ற கேள்விகள் எழுந்தன.

இதுபற்றி அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க்வெய்னி முள்ளின் கூறுகையில், ''நாடு முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். அதற்கான அவசியம் எதுவும் இல்லை. ஏனென்றால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தகவல் தொடர்பு பிரச்சனையில் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இதுபற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வேறு எந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் இல்லை'' என்றார்.

அதேபோல், அமெரிக்காவின் போக்குவரத்து துறை அமைச்சர் சீன் டப்பி கூறுகையில், ''நாடு முழுவதும் விமானங்களின் சேவையை திடீரென்று பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுத்தி வைகத்துள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களின் தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது. பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் டெக்னீசியன்கள் பிரச்சனையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி கூடுதல் தகவல் கிடைத்தவுடன் அதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+