இந்தியாவிடம் இருந்த பெற்ற 17 பரிசுகள் எங்கே? பெரிய சிக்கலில் டிரம்ப்.. விசாரிக்கும் அமெரிக்க அரசு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு இப்போது சிக்கல் மீது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் இருந்து பெறப்பட்ட பல லட்சம் மதிப்பிலான பரிசுகளுக்கு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் கணக்குக் காட்டவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்தியாவிடம் இருந்து மட்டும் இப்படி அவர் 17 பரிசுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டிரம்ப். அப்போது நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். அதிபர் பதவியில் இருந்த ஒருவர் தேர்தலில் தோற்பது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
அதன் பிறகு அங்கு நாடாளுமன்ற கட்டிடத்தில் வன்முறை எல்லாம் நடந்தது. மேலும், டிரம்ப் அதிபர் பதவியில் இருந்தபோது தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

டிரம்ப்
இதற்கிடையே டிரம்ப் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2016 தேர்தல் காலகட்டத்தில் வாக்குப்பதிவுக்கு சில காலம் இருந்த போது அமெரிக்க ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தன்னுடன் டிரம்புடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறி அதிர்ச்சி கொடுத்தார். இது குறித்து வெளிப்படையாகத் தொடர்ந்து பேசி வந்தார். இது வாக்குப்பதிவில் தனக்கு எதிராக அமைந்துவிடும் என்பதால், டிரம்ப் ஒரு பெருந்தொகையை ஸ்டோர்மி டேனியல்ஸ் கொடுத்து தன்னை பற்றி ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். இதற்காக அவர் தேர்தல் நிதியை பயன்படுத்தியதாகவே இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.

பரிசு பொருள் விவகாரம்
இந்த வழக்கில் அவர் மீது இன்று முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினர் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதாவது, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் உலக தலைவர்களிடம் இருந்து பெற்ற 2.50 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 2 கோடி) மதிப்பிலான கிப்ட்களை கணக்குக்காட்டத் தவறியுள்ளனர். இதில் 47,000 டாலர் (இந்திய மதிப்பில் 38 லட்சம்) கிப்ட் இந்தியத் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் கொடுத்ததாகும்.

விரிவான அறிக்கை
"சவூதி வாள்கள், இந்திய நகைகள்: வெளிநாட்டுப் பரிசுகளை வெளிப்படுத்துவதில் டிரம்ப் நிர்வாகம் தோல்வி" என்ற தலைப்பில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். பொதுவாக ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டிற்குச் செல்லும் போது பரிசுகள் வழங்கப்படும். அரசு பொறுப்பில் இருக்கும் நபருக்கு வழங்கப்படும் பரிசு என்பதால் இதைத் தனிப்பட்ட பரிசாகக் கருதக் கூடாது. அந்த நாட்டிற்கான பரிசாகவே கருத வேண்டும். இதன் காரணமாக அரசு பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் வெளிநாட்டு பயணங்களில் பெறும் பரிசுகளை முறையாகக் கணக்குக்காட்ட வேண்டும்.

பரிசுகள்
ஆனால், டிரம்பும் சரி, அவரது குடும்பத்தினரும் இதுபோல வெளிநாடுகளில் இருந்து பெற்ற பரிசுகளுக்குக் கணக்குக் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆளும் ஜனநாயக கட்சியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தான் இந்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது அதிபராக இருந்த போது இந்தியா, சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட 100க்கும் மேற்பட்ட பரிசுகளை டிரம்பும் அவரது மனைவியும் கணக்குக்காட்டத் தவறியதாகக் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு
கோல்ஃப் கிளப்கள், எல் சால்வடாரில் இருந்து தரப்பட்ட டொனால்ட் டிரம்பின் உருவப்படம் உள்ளிட்ட பல பொருட்களுக்கு முறையாகக் கணக்குக் காட்டப்படவில்லை என்று இந்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் ஜோ பைடன் அதிபரான சில மாதங்களில் வெளியே வந்தது. 2021 நவம்பரில், டிரம்ப் அதிபராக இருந்த போது நிர்வாக நடைமுறைகள் மீறப்பட்டதாகவும் குறிப்பிடத் தகுந்த மதிப்புள்ள பொருட்களைக் காணவில்லை என்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். முறையான பதிவு பராமரிப்பு இல்லாமல் போனது.. பரிசுப் பொருட்களுக்கு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியது இதற்குக் காரணம் என்றும் கூறியிருந்தார்.

இந்தியாவிடம் இருந்த பெற்ற பரிசுகள்
ட்ரம்ப் குடும்பம் இந்தியாவிடமிருந்து பெற்ற பரிசுகளில் மட்டும் 17 பரிசுகளை அறிவிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு $47,000 டாலர் ஆகும் (இந்திய மதிப்பில் 38 லட்சம்). இதில் யோகி ஆதித்யநாத் அளித்த 8,500 டாலர் மதிப்பிலான குவளை, 4,600 டாலர் மதிப்பிலான தாஜ்மஹால் மாடல், முன்னாள் குடியரசுத் தலைவர் கோவிந்தின் அளித்த 6,600 டாலர் மதிப்பிலான இந்திய விரிப்பு, பிரதமர் மோடி அளித்த 1,900 முன்னாள் குடியரசுத் தலைவர் கோவிந்தின் கஃப்லிங்க்ஸ் ஆகியவை அடங்கும்.












Click it and Unblock the Notifications