அடங்காத டிரம்ப்.. H-1B விசா கட்டணம் மீண்டும் உயர்வு? அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு புதிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து, அங்கேயே வேலை பார்க்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு செலவு மேலும் அதிகரிக்க போகிறது. அதாவது H-1B விசா மற்றும் F-1 மாணவர்கள் அங்கேயே வேலை செய்யும் ஓபிடி திட்டத்திற்கு புதிய கட்டணங்களை விதிப்பதற்கான நடவடிக்கையை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை தொடங்கியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் அரசு பொறுப்பேற்ற பிறகு, அவர்கள் வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக குடியேறியவர்களுக்கு எதிராகவும் டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் பெறும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள்.

visa applications

கட்டணம் உயரும்

இதற்கிடையே வெளிநாட்டினருக்கான விசாவுக்கு புதிய கட்டணங்களை விதிப்பதற்கான நடவடிக்கைகளில் டிரம்ப் அரசு இறங்கியுள்ளது. புதிதாக H-1B விசா கோரி விண்ணப்பிப்போர் மற்றும் F-1 மாணவர் விசாவில் அமெரிக்காவில் தங்கள் படிப்பை முடித்து, அங்கேயே ஓபிடி திட்டத்தில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு இது பொருந்தும். அதேநேரம் இந்த முன்மொழிவுகள் தற்போது பரிசீலனையில் உள்ளதால், எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதனால் இந்தியர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கலாம். ஏனென்றால் 2024 ஆண்டில் H-1B கோரி விண்ணப்பித்தவர்களில் 71% இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆகும். எனவே, கட்டணத்தை அதிகரிக்கும்போது, இந்தியர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கும். இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அமெரிக்க அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, புதிய கட்டணங்கள் தொடர்பான விதிமுறைகளை வகுக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இரு உத்தரவுகள்

கடந்த ஆகஸ்ட் 19, 20ம் தேதிகளில் இது தொடர்பான முன்மொழிவுகள் டிரம்ப் அரசுக்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. H-1B விசாவுக்கு ஒன்று, மற்றும் மாணவர்களுக்கான F-1 விசாவுக்கு ஒன்று என தனித்தனியாக இரு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த முன்மொழிவுகள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவை அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், புதிய விண்ணப்பத்துக்கு 1 லட்சம் டாலர் வரை கட்டணம் விதிக்கப்படலாம் என தெரிகிறது. இருப்பினும், டிரம்ப் அரசு இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.

என்ன நடந்தது!

டிரம்ப் அரசு கடந்தாண்டு செப்டம்பரில் குறிப்பிட்ட புதிய H-1B மனுக்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. இருப்பினும், இந்த உத்தரவை கடந்த ஜூன் 8ஆம் தேதி மாசசூசெட்ஸ் மத்திய மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. H-1B விசா கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் அதிபருக்கு இல்லை.. அது நாடாளுமன்றத்திற்கே இருப்பதாக சொல்லி நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டது. இதற்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்தபோதும், டிரம்பிற்கு ஆதரவாக இதில் தீர்ப்பு வரவில்லை. இந்த சூழலில் தான் மீண்டும் கட்டணத்தை விதிக்கும் முயற்சியில் டிரம்ப் அரசு இறங்கியுள்ளது.

இந்தியர்கள்

இதனால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. ஏனென்றால் பல இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் முதலில் F-1 விசா பெற்று, பிறகு அங்கேயே ஒபிடி திட்டத்தில் வேலை செய்து, பிறகு H-1B விசா பெறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஒபிடி மற்றும் H-1B என இரண்டிற்குமே கட்டணம் உயர்த்தப்படும் என்பதால் அது கூடுதல் சுமையாகவே இருக்கும்.

தற்போது OPT வேலை அனுமதிக்கான கட்டணம் 470 (சுமார் ரூ.39,000) ஆக உள்ளது. இந்த கட்டணம் உயர்ந்தால்.. இதை மாணவர்களே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதேநேரம் H-1B மனுக்களுக்கான பெரும்பாலான கட்டணங்களை வேலை வழங்கும் நிறுவனங்களே செலுத்துகின்றன என்பதால் அதில் பெரிய பிரச்சினை இருக்காது.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+